பிஎஸ்6 250 சிசி என்ஜினை பெற்ற யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் FZ 25 ஸ்ட்ரீட்ஃபைட்டர் மாடலுடன் கூடுதலாக புதிய டூரர் ஸ்டைலை வெளிப்படுத்தும் FZS 25 பைக் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யமஹாவின் எஃப்இசட்எஸ் 25 மாடல் இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
விற்பனையில் கிடைக்கின்ற எஃப்இசட் 25 பைக்கின் தோற்ற அமைப்பில் எந்த மாறுதல்களும் பெறாமல் பிஎஸ்6 முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய FZS 25 , FZ25 என இரு பைக்கிலும் புளூ கோர் என்ஜின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20.1 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
மற்றபடி கூடுதல் வசதிகளாக எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன், பை ஆப்ஷனை பெற்ற எல்இடி ஹெட்லேம்பைப் பெறுகிறது. FZ 25 பைக்கின் 2020 மாடலில் பிற புதிய அம்சங்கள் எல்சிடி டிஸ்ப்ளே, அண்டர்பெல்லி கோவல் பேனல் மற்றும் சைட் ஸ்டாண்ட் என்ஜின் கட் ஆஃப் சுவிட்ச் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. எஃப்இசட் 25 மாடல் மெட்டாலிக் பிளாக் மற்றும் ரேசிங் ப்ளூ நிறத்தில் கிடைக்கும்.
புதிதாக வந்துள்ள யமஹா FZS25 பைக்கில் புதிய வைசர் பெற்ற ஹெட்லைட், நெக்கல் கார்டுஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.புதிய நிறத்துடன் கூடுதலாக கோல்டன் நிற ரிம் பெற்றுள்ளது.
FZ25 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது. தற்போது கூடுதலாக டுயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. எஃப்இசட் 25 பைக்கில் 14 லிட்டர் கொள்ளளவுகொண்ட எரிபொருள் கலன் மற்றும் 160 மீமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றதாக உள்ளது.
பிஎஸ்6 என்ஜினை பெற்ற யமஹா FZ 25 பைக் விலை ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட உள்ளது. புதிய FZS 25 பைக்கின் டூரிங் ஸ்டைலை பெற்ற மாடல் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட உள்ளது.