பிரசத்தி பெற்ற யமஹா ஆர்15 V3.0 பைக்கின் அடிப்படையில் வரவுள்ள யமஹா MT15 நேக்டூ ஸ்போர்ட்டிவ் பைக் மாடல் இந்திய சந்தையில் அடுத்த சில வாரங்களுக்குள் சந்தைக்கு வரவுள்ளது. எம்டி15 பைக் விலை ரூபாய் 1.25 லட்சத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
யமஹா எம்டி15: Yamaha MT15
சர்வதேச அளவில் சில நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கின்ற பிரசத்தி பெற்ற யமஹா எம்டி15 பைக் மாடல் மிகவும் ஸ்டைலிஷாக இளைய தலைமுறையினரை விருப்பும் வகையில் அமைந்திருக்கும் மாடலாக எம்டி15 இந்திய சந்தையிலும் விளங்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலில் இருந்து விலை குறைப்பிற்காக சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் ஸ்டைலிஷான தோற்றம், எல்இடி விளக்குகள் உள்ளிட்ட அம்சங்களில் எந்த குறையும் இல்லாத மாடலாக அறிமுகம் செய்ய யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட உள்ளது.
யமஹா MT15 பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க்கு சஸ்பென்ஷனுக்கு மாற்றாக சாதாரன டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனை பெற்று பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை இந்த எம்டி15 பைக் இந்தியாவில் பெற்றிருக்கும்.
ஆர்15 வெர்ஷன் 3.0 மாடலில் இடம்பெற்றுள்ள என்ஜினில் எந்த மாற்றமு இல்லாமல், எம்டி15 பைக்கில் 19.1 ஹெச்பி வரையிலான பவர், 14.7 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் புதிய 155சிசி எஞ்சின் இடம்பெற்று 6 வேக கியர்பாக்சுடன் சிலிப்பர் கிளட்ச் போன்றவற்றை பெற்றிருக்கும்.
282 மிமீ டிஸ்க் பிரேக் ஆகியவற்றுடன், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பருடன் டயரில் 240 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றுள்ளது. தற்போது டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டிருக்கும் என கருதப்படுகின்றது.
சமீபத்தில் யமஹா மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் யமஹா FZ V3.0 , யமஹா FZ25 யமஹா ஃபேஸர் 25 ஏ.பி.எஸ் மற்றும் யமஹா R15 ஏ.பி.எஸ் வெளிவந்துள்ளது. எனவே, யமஹா எம்டி15 பைக் ரூ.1.25 லட்சத்தில் மாரச் அல்லது ஏப்ரல் மாதத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.