இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம், இரண்டு புதிய நிறங்களை பெற்ற யமஹா சிக்னஸ் ரே ZR ஸ்கூட்டர் மாடலை டிஸ்க் பிரேக் பெற்ற மாடலில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிறத்தை தவிர வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது.
யமஹா சிக்னஸ் ரே ZR ஸ்கூட்டர்
இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மிகவும் ஸ்டைலிஷான ஸ்கூட்டர்களில் ஒன்றாக விளங்கும் சிக்னஸ் மாடலில் தற்போது மொத்தமாக 5 நிறங்களில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.
சிக்னஸ் ரே இசட்ஆர் மாடலில் புளூ கோர் நுட்பத்துடன் கூடிய எஞ்சினாக விற்பனை செய்யப்படுகின்ற 113 சிசி எஞ்சின் மிக சிறப்பான வகையில் எரிபொருள் சிக்கனத்தை வழங்கவல்லதாக விளங்குகின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7 bhp ஆற்றல், 8.1 Nm இழுவைத் திறன் கொண்டதாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வினை பெற்று விளங்குகின்றது.
முந்தைய நிறங்களான பச்சை, நீலம் மற்றும் கருப்பு ஆகியவற்றுடன் ரோஸ்டர் சிவப்பு, ஆர்மென்டா நீலம் ஆகிய இரு நிறத்துடன் மொத்தம் 5 நிறங்களில் கிடைக்க துவங்கியுள்ளது. டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக் என இரு விதமான தேர்வுகளில் கிடைக்கின்ற சிக்னஸ் ரே இசட்ஆர் மாடலில் 21லிட்டர் கொள்ளவு கொண்ட இருக்கை அடிப்பகுதியில் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனையை அறிமுகப்படுத்திய போது பேசிய, யமஹா மோட்டார் இந்தியாவின் மூத்த துணைத் தலைவர் ரெய்ல் குரியன் கூறுகையில், இரு சக்கர வாகன உற்பத்தி கிட்டத்தட்ட 8 சதவீத வளர்ச்சியை 2017 ஆம் ஆண்டில் பதிவு செய்துள்ளது. மேலும், ஸ்கூட்டர் பிரிவின் வளர்ச்சி 12 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே மிக ஸ்டைலிஷான ஸ்கூட்டரை இளைஞர்களை பெற இலக்காகக் கொண்டது. சிக்னஸ் ரே ZR இல் புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் , இந்த பிரிவில் புதிய உற்சாகத்தை மீண்டும் வழங்குவதற்கு நிறுவனம் எதிர்நோக்கியிருக்கின்றது ” என குறிப்பிட்டுள்ளார்.
2018 Yamaha Cygnus Ray ZR Price
யமஹா சிக்னஸ் ரே ZR டிரம் பிரேக் – ரூ. 53,451
யமஹா சிக்னஸ் ரே ZR டிஸ்க் பிரேக் – ரூ. 55,898
யமஹா சிக்னஸ் ரே ZR டிஸ்க் (பிளாக்) – ரூ. 56,898
(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)