இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஏராக்ஸ் 155 மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டர் இந்தியாவில் கிடைக்கின்ற ஸ்கூட்டர்களில் அதிகபட்ச பவரை வெளிப்படுத்துகின்ற மாடல் என்ற பெருமையுடன் 14.96 ஹெச்பி வழங்குகின்றது.
122 கிலோ எடை பெற்றுள்ள ஏராக்ஸில் இரு பக்கத்திலும் 14 அங்குல வீல் கொடுக்கப்பட்டு 140-section அகலமான டயருடன், ப்ளூடுத் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன் ஆர்15 என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றது.
யமஹா Aerox 155
ஏராக்ஸ் மேக்ஸி ஸ்கூட்டரில் 155 சிசி திரவ குளிரூட்டப்பட்ட, DOHC ஒற்றை சிலிண்டர் எஞ்சின் ஆகும். VVA உடன் 8,000 ஆர்பிஎம்மில் 14.8 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. V- பெல்ட் பெற்ற CVT கியர்பாக்ஸ் பயன்படுத்துகிறது. இதே என்ஜின் R15 V4, MT-15 மாடல்களில் உள்ளது.
ஏராக்ஸ் 155 சிறப்பம்சங்களைப் பொருத்தவரை, 25 லிட்டர் அண்டர்சீட் சேமிப்பு இடத்தைக் கொண்டுள்ளது. மற்ற அம்சங்களில் டிஜிட்டல் கருவி, ஸ்டார்ட்-ஸ்டாப் டெக், எல்இடி லைட்டிங், சார்ஜிங் சாக்கெட் மற்றும் ப்ளூடூத் இணைப்பு ஆகியவை அடங்கும். 14 அங்குல சக்கரங்கள் மற்றும் 140-பிரிவு பின்புற டயருடன் பொருத்தப்பட்டுள்ளது.
யமஹா ஏராக்ஸ் 155 அதிகபட்ச செயல்திறன் ஸ்கூட்டரை இந்தியாவில் ரூ.1.29 லட்சத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Variant | Price |
---|---|
Aerox 155 Grey Vermillion & Racing Blue | Rs. 1,29,000/- |
Aerox 155 Monster Energy MotoGP Edition | Rs. 1,30,500/- |
Prices are ex-showroom, Delhi