இந்தியாவில் 150cc சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா நிறுவனத்தின் FZ பைக் வரிசையில் உள்ள FZ-FI, FZ-S FI Ver 3.0, FZ-S FI Ver 4.0, FZ-S FI Ver 4.0 DLX மற்றும் ரெட்ரோ ஸ்டைல் FZ-X ஆகிய 5 பைக்குகளின் என்ஜின், மைலேஜ் சிறப்புகள் மற்றும் தமிழ்நாடு ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக இந்த 5 பைக்குகளில் ஒரே என்ஜின் பெற்றதாக அமைந்து 4 மாடல்கள் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்றுள்ள நிலையில் மற்றபடி சிறிய அளவிலான மாற்றங்கள் கூடுதல் வசதிகள் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி அம்சத்தை பெற்றுள்ளது.
Yamaha FZ 150cc Engine
5 பைக்குகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள பொதுவாக உள்ள 149cc ஏர்கூல்டு, 4-ஸ்ட்ரோக், SOHC, 2 வால்வு பெற்ற என்ஜின் அதிகபட்சமாக 12.4PS பவர் மற்றும் 13.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
Yamaha FZ 150CC Engine | |
Engine Displacement (CC) | 149 cc |
Bore & Stroke | 57.3mm x 57.9mm |
Compression Ratio | 9.6:1 |
Power (PS@rpm) | 12.4 PS at 7,250 rpm |
Torque (Nm@rpm) | 13.3 Nm at 5500 rpm |
Gear Box | Constant mesh, 5-speed |
என்ஜின் மட்டுமல்லாமல் இந்த பைக்குகளில் பொதுவாக பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 282mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220mm டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் 7 ஸ்டெப் மோனோஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.
இந்த பைக்குகளின் முன்புற டயர் 100/80-17 மற்றும் ரேடியல் 140/60-R17 பின்புற டயரை கொண்டுள்ளது. யமஹா 150cc மாடல்களின் மைலேஜ் லிட்டருக்கு 52-55 கிமீ வரை கிடைக்கும்.
2024 Yamaha FZ-FI
குறைந்த விலையில் துவங்குகின்ற யமஹா FZ-Fi பைக்கில் மேட் சியான், மெட்டாலிக் பிளாக் என இரு நிறங்களின் விலை ரூ.1,17,239 (எக்ஸ்-ஷோரூம்) பெற்று டிஜிட்டல் நெகட்டிவ் எல்சிடி கிளஸ்ட்டர் பெற்று இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஒற்றை இருக்கை அமைப்பு உள்ள யமஹா FZ-Fi பைக் மாடலில் எல்இடி ஹெட்லைட் பெற்றுள்ளது.
2024 யமஹா FZ-Fi பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,43,256 வரை மாறுபடும்.
2024 Yamaha FZ-S FI Ver 3.0
நெக்ட்டிவ் எல்சிடி டிஸ்பிளே கொண்டு யமஹா மோட்டார்சைக்கிள் கனெக்ட் X அம்சத்தின் மூலம் ப்ளூடூத் இணைப்பினை ஏற்படுத்தி பல்வேறு வசதிகளை பெறுகின்ற 2024 யமஹா FZ-S FI Ver 3.0 பைக்கில் மேட் கிரே, மேட் ரெட் நிறங்களின் விலை ரூ.1,22,439 மற்றும் டார்க் நைட் ரூ.1,23,439 (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. இந்த மாடலும் மற்ற பைக்குகளை போல டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.
2024 யமஹா FZ-S FI Ver 3.0 பைக்கின் ஆன்ரோடு விலை ₹1,49,051 முதல் ₹ 1,51,554 வரை மாறுபடும்.
2024 Yamaha FZ-S FI Ver 4.0
மற்ற பைக்குகளை போலவே 149சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற 2024 யமஹா FZ-S FI Ver 4.0 மாடலில் மேலே உள்ள இரு மாடல்களிலும் இருந்த மாறுபட்ட புதிய எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர் உடன் டிராக்ஷன் கண்ட்ரோல், கருப்பு நிற எக்ஸ்ஹாஸ்ட் யமஹா Y-Connect ஆப் வசதியுடன் எல்சிடி கிளஸ்ட்டர் கொண்டு மேட் பிளாக் மற்றும் டார்க் மேட் ப்ளூ என இரு நிறங்களை கொண்டு விலை ரூ. 1,29,939 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
2024 யமஹா FZ-S FI Ver 4.0 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,58,856 வரை உள்ளது.
2024 Yamaha FZ-S FI Ver 4.0 DLX
FZ-S பைக்குகளில் டாப் மாடலாக உள்ள 2024 யமஹா FZ-S FI Ver 4.0 DLX பைக்கில் FZ-S FI Ver 4.0 பைக்கின் வசதிகளுடன் 3D லோகோ, அலாய் வீல் ப்ளூ அல்லது கோல்டு நிறத்திலும், டிராக்ஷன் கண்ட்ரோல், யமஹா Y-Connect ஆப் வசதியுடன் ரேசிங் ப்ளூ, மெட்டாலிக் கிரே, மெஜெஸ்டி ரெட் மற்றும் மேட் பிளாக் நிறங்கள் விலை ₹ 1,30,439 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
2024 யமஹா FZ-S FI Ver 4.0 DLX பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,59,631 வரை உள்ளது.
2024 Yamaha FZ-X
ரெட்ரோ ஸ்டைல் பெற்ற 2024 யமஹா FZ-X பைக் மாடலில் 149cc என்ஜின் பொருத்தப்பட்டு அலாய் வீல் கோல்டு நிறத்திலும், டிராக்ஷன் கண்ட்ரோல், யமஹா Y-Connect ஆப் வசதியுடன், வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் பெற்று மேட் காப்பர், மேட் ப்ளூ, மற்றும் மேட் டைட்டன் என மூன்று நிறங்களை பெற்று ரூ.1,37,939 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். கூடுதலாக FZ-X க்ரோம் எடிசன் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
2024 யமஹா FZ-X பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,68,130 வரை உள்ளது.
Yamaha FZ 150cc list | Ex-showroom Price | on-road Price |
---|---|---|
2024 Yamaha FZ-fi | ₹ 1,17,239 | ₹ 1,43,256 |
2024 Yamaha FZ-S FI V3.0 | ₹ 1,23,439 | ₹ 1,51,554 |
2024 Yamaha FZ-S FI V4.0 | ₹ 1,29,939 | ₹ 1,58,856 |
2024 Yamaha FZ-S FI V4.0 Dlx | ₹ 1,30,439 | ₹ 1,59,631 |
2024 Yamaha FZ-X | ₹ 1,37,939 | ₹ 1,68,130 |
(All price Tamil Nadu)
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள்.