இந்தியாவில் 150cc சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா நிறுவனத்தின் FZ பைக் வரிசையில் உள்ள FZ-S FI Hybrid, FZ-FI, FZ-S FI Ver 3.0, FZ-S FI Ver 4.0, FZ-S FI Ver 4.0 DLX மற்றும் ரெட்ரோ ஸ்டைல் FZ-X ஆகிய 6 பைக்குகளின் என்ஜின், மைலேஜ் சிறப்புகள் மற்றும் தமிழ்நாடு ஆன்ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக இந்த 6 பைக்குகளில் ஒரே என்ஜின் பெற்றதாக அமைந்து 4 மாடல்கள் ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்றுள்ள நிலையில் மற்றபடி சிறிய அளவிலான மாற்றங்கள் கூடுதல் வசதிகள் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி அம்சத்தை பெற்றுள்ளது.
Yamaha FZ 150cc Engine
6 பைக்குகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள பொதுவாக உள்ள 149cc ஏர்கூல்டு, 4-ஸ்ட்ரோக், SOHC, 2 வால்வு பெற்ற என்ஜின் அதிகபட்சமாக 12.4PS பவர் மற்றும் 13.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
Yamaha FZ 150CC Engine | |
Engine Displacement (CC) | 149 cc |
Bore & Stroke | 57.3mm x 57.9mm |
Compression Ratio | 9.6:1 |
Power (PS@rpm) | 12.4 PS at 7,250 rpm |
Torque (Nm@rpm) | 13.3 Nm at 5500 rpm |
Gear Box | Constant mesh, 5-speed |
என்ஜின் மட்டுமல்லாமல் இந்த பைக்குகளில் பொதுவாக பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 282mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220mm டிஸ்க் பிரேக்குடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் 7 ஸ்டெப் மோனோஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.
இந்த பைக்குகளின் முன்புற டயர் 100/80-17 மற்றும் ரேடியல் 140/60-R17 பின்புற டயரை கொண்டுள்ளது. யமஹா 150cc மாடல்களின் மைலேஜ் லிட்டருக்கு 52-55 கிமீ வரை கிடைக்கும்.
2025 Yamaha FZ-S FI Hybrid
அடிப்படையான டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லையென்றாலும், தற்பொழுது முன்புற இன்டிகேட்டர் ஆனது பெட்ரோல் டேங்கின் பகுதியில் கொடுக்கப்பட்டு சியான் கிரே மெட்டாலிக், ரேசிங் ப்ளூ என இரு நிறங்களை பெற்றுள்ளது.
ரூ.1,45,539 விலையில் வந்துள்ள 2025 யமஹா FZ-S FI ஹைபிரிட் மாடலில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் மூலம் கூடுதல் பவர் மற்றும் டார்க் அசிஸ்ட் ஆனது பேட்டரி மூலம் பவர் வழங்கப்படுவதுடன், சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, எஞ்சின் ஐடில் சமயங்களில் தானாகவே எஞ்சின் ஆஃப் ஆகிவிடுவதுடன், கிளட்ச் லிவரை இயக்கினால் உடனடியாக எஞ்சின் செயல்பட துவங்குகின்றது. கூடுதலாக 4.2 அங்குல TFT கிளஸ்ட்டரில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகள் உள்ளது.
2024 யமஹா FZ-Fi Hybrid பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,71,856 வரை அமைந்துள்ளது.
2024 Yamaha FZ-FI
குறைந்த விலையில் துவங்குகின்ற யமஹா FZ-Fi பைக்கில் மேட் சியான், மெட்டாலிக் பிளாக் என இரு நிறங்களின் விலை ரூ.1,17,239 (எக்ஸ்-ஷோரூம்) பெற்று டிஜிட்டல் நெகட்டிவ் எல்சிடி கிளஸ்ட்டர் பெற்று இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஒற்றை இருக்கை அமைப்பு உள்ள யமஹா FZ-Fi பைக் மாடலில் எல்இடி ஹெட்லைட் பெற்றுள்ளது.
2024 யமஹா FZ-Fi பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,43,256 வரை மாறுபடும்.
2024 Yamaha FZ-S FI Ver 3.0
நெக்ட்டிவ் எல்சிடி டிஸ்பிளே கொண்டு யமஹா மோட்டார்சைக்கிள் கனெக்ட் X அம்சத்தின் மூலம் ப்ளூடூத் இணைப்பினை ஏற்படுத்தி பல்வேறு வசதிகளை பெறுகின்ற 2024 யமஹா FZ-S FI Ver 3.0 பைக்கில் மேட் கிரே, மேட் ரெட் நிறங்களின் விலை ரூ.1,22,439 மற்றும் டார்க் நைட் ரூ.1,23,439 (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. இந்த மாடலும் மற்ற பைக்குகளை போல டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.
2024 யமஹா FZ-S FI Ver 3.0 பைக்கின் ஆன்ரோடு விலை ₹1,49,051 முதல் ₹ 1,51,554 வரை மாறுபடும்.
2024 Yamaha FZ-S FI Ver 4.0
மற்ற பைக்குகளை போலவே 149சிசி என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்ற 2024 யமஹா FZ-S FI Ver 4.0 மாடலில் மேலே உள்ள இரு மாடல்களிலும் இருந்த மாறுபட்ட புதிய எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் மற்றும் டர்ன் இண்டிகேட்டர் உடன் டிராக்ஷன் கண்ட்ரோல், கருப்பு நிற எக்ஸ்ஹாஸ்ட் யமஹா Y-Connect ஆப் வசதியுடன் எல்சிடி கிளஸ்ட்டர் கொண்டு மேட் பிளாக் மற்றும் டார்க் மேட் ப்ளூ என இரு நிறங்களை கொண்டு விலை ரூ. 1,29,939 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
2024 யமஹா FZ-S FI Ver 4.0 பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,58,856 வரை உள்ளது.
2024 Yamaha FZ-S FI Ver 4.0 DLX
FZ-S பைக்குகளில் டாப் மாடலாக உள்ள 2024 யமஹா FZ-S FI Ver 4.0 DLX பைக்கில் FZ-S FI Ver 4.0 பைக்கின் வசதிகளுடன் 3D லோகோ, அலாய் வீல் ப்ளூ அல்லது கோல்டு நிறத்திலும், டிராக்ஷன் கண்ட்ரோல், யமஹா Y-Connect ஆப் வசதியுடன் ரேசிங் ப்ளூ, மெட்டாலிக் கிரே, மெஜெஸ்டி ரெட் மற்றும் மேட் பிளாக் நிறங்கள் விலை ₹ 1,30,439 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
2024 யமஹா FZ-S FI Ver 4.0 DLX பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,59,631 வரை உள்ளது.
2024 Yamaha FZ-X
ரெட்ரோ ஸ்டைல் பெற்ற 2024 யமஹா FZ-X பைக் மாடலில் 149cc என்ஜின் பொருத்தப்பட்டு அலாய் வீல் கோல்டு நிறத்திலும், டிராக்ஷன் கண்ட்ரோல், யமஹா Y-Connect ஆப் வசதியுடன், வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் பெற்று மேட் காப்பர், மேட் ப்ளூ, மற்றும் மேட் டைட்டன் என மூன்று நிறங்களை பெற்று ரூ.1,37,939 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். கூடுதலாக FZ-X க்ரோம் எடிசன் விற்பனைக்கு வெளியாக உள்ளது.
2024 யமஹா FZ-X பைக்கின் ஆன்ரோடு விலை ₹ 1,68,130 வரை உள்ளது.
Yamaha FZ 150cc list | Ex-showroom Price | on-road Price |
---|---|---|
2025 Yamaha FZ-S fi Hybrid | ₹ 1,45,539 | ₹ 1,71,856 |
2024 Yamaha FZ-fi | ₹ 1,17,239 | ₹ 1,43,256 |
2024 Yamaha FZ-S FI V3.0 | ₹ 1,23,439 | ₹ 1,51,554 |
2024 Yamaha FZ-S FI V4.0 | ₹ 1,29,939 | ₹ 1,58,856 |
2024 Yamaha FZ-S FI V4.0 Dlx | ₹ 1,30,439 | ₹ 1,59,631 |
2024 Yamaha FZ-X | ₹ 1,37,939 | ₹ 1,68,130 |
(All price Tamil Nadu)
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலை பட்டியலும் தமிழ்நாட்டின் தோராயமானதாகும்.. எனவே விலை விபரம் டீலர்களுக்கு டீலர் மாறுபடும்.. துல்லியமான விலையை அறிய டீலரை அனுகுங்கள்.
Last Updated – 12-03-2025