யமஹா மோட்டார் நிறுவனம் 150cc பைக்குகளில் விற்பனை செய்து வருகின்ற FZ-S V4, FZ X , FZ-S V3, மற்றும் FZ V3 என நான்கு மாடல்களின் என்ஜின், சிறப்புகள், மைலேஜ் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
150cc சந்தையில் கிடைக்கின்ற நேரடியான மாடல்கள் பஜாஜ் பல்சர் P150, சுசூகி ஜிக்ஸர் ஆகியவற்றுடன் மற்ற 160cc பிரிவில் உள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 160 2வி, ஆர்டிஆர் 160 4வி ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி, எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி, ஹோண்டா எக்ஸ்-பிளேடு, ஹோண்டா யூனிகார்ன், பல்சர் என்160, மற்றும் பல்சர் என்எஸ் 160 ஆகியவற்றுடன் சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது.
2023 Yamaha FZ-S Fi V4.0 Dlx
பொதுவாக நான்கு மாடல்களுமே ஒரே 149cc ஏர் கூல்டு, 2 வால்வு பெற்ற என்ஜினை பகிர்ந்து கொண்டு யமஹா FZ-S V4 அதிகபட்சமாக 9.1 kW (12.4PS) பவர் 7,250 r/min மற்றும் 13.3 N.m டார்க் 5,500 r/min வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
யமஹா Y-கனெக்ட் ஆப் மூலம் இணைக்கப்பட்டுள்ள பைக்கில் FZ-S Fi V4 dlx மாடல் ப்ளூடுத் மூலம் கால் அலர்ட், எஸ்எம்எஸ் அலர்ட், எரிபொருள் பயன்பாடு, பராமரிப்பு தகவல் மற்றும் பல்வேறு செயல்பாடுளை கொண்டதாக அமைந்துள்ளது. தோற்ற அமைப்பில் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் வழங்கப்பட்டு மிக நேர்த்தியான மெட்டாலிக் கருப்பு, மெட்டாலிக் கிரே மற்றும் மெஜெஸ்டி சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றது.
டிராக்ஷன் கன்ட்ரோல் வசதியுடன் 100/80-17 முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 140/60-17 ரேடியல் டயர் வழங்கப்பட்டு, முன்பக்கத்தில் 282mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220mm டிஸ்க் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
2023 யமஹா எஃப்இசட் வி4 டிஎல்எக்ஸ் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,29,139 (தமிழ்நாடு)
Yamaha FZ-S FI Ver 4.0 DLX | |
Engine Displacement (CC) | 149 cc Air-cooled |
Power | 12.4 hp @ 7,250 rpm |
Torque | 13.3 Nm @ 5,500 rpm |
Gear Box | 5 Speed |
2023 யமஹா FZ-S Fi Ver 4.0 DLX பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,48,690
2023 Yamaha FZ X
நியோ ரெட்ரோ ஸ்டைலை பெற்ற யமஹா எஃப்இசட் எக்ஸ் பைக்கில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு நேர்த்தியான இருக்கை அமைப்பு உள்ளது. மிகவும் கவனிக்கதக்க ரெட்ரோ நிறங்களாக மேட் காப்பர், டார்க் மேட் ப்ளூ மற்றும் மேட் கருப்பு என மூன்று நிறங்களை பெற்றுள்ளது.
149சிசி அதிகபட்சமாக 12.4PS பவர் 7,250 r/min மற்றும் 13.3 N.m டார்க் 5,500 r/min வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
41 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும் , 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. டிராக்ஷன் கன்ட்ரோல் வசதியுடன் 100/80-17M/C 52P முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 140/60R17M/C 63P ரேடியல் டயர் வழங்கப்பட்டு, முன்பக்கத்தில் 282mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220mm டிஸ்க் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
தங்க நிறத்திலான அலாய் வீல் பெற்ற யமஹா FZ X பைக்கில் நெக்ட்டிவ் எல்சிடி டிஸ்பிளே கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு, யமஹா Y-கனெக்ட் ஆப் ப்ளூடுத் மூலம் கால் அலர்ட், எஸ்எம்எஸ் அலர்ட், எரிபொருள் பயன்பாடு, பராமரிப்பு தகவல் மற்றும் பல்வேறு செயல்பாடுளை கொண்டதாக அமைந்துள்ளது.
2023 யமஹா எஃப்இசட் எக்ஸ் எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,37,639 முதல் ₹ 1,38,639 (தமிழ்நாடு)
Yamaha FZ X | |
Engine Displacement (CC) | 149 cc Air-cooled |
Power | 12.4 hp @ 7,250 rpm |
Torque | 13.3 Nm @ 5,500 rpm |
Gear Box | 5 Speed |
2023 யமஹா FZ X பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,57,540 முதல் ₹ 1,58,605 (DARK MATTE BLUE)
2023 Yamaha FZ-S Fi V3.0
அதிகபட்சமாக 12.4PS பவர் 7,250 r/min மற்றும் 13.3 N.m டார்க் 5,500 r/min வெளிப்படுத்துகின்ற 149cc என்ஜின் பெற்றதாக யமஹா FZ-S FI Ver 3.0 அமைந்துள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும் , 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. டிராக்ஷன் கன்ட்ரோல் வசதியுடன் 100/80-17M/C 52P முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 140/60R17M/C 63P ரேடியல் டயர் வழங்கப்பட்டு, முன்பக்கத்தில் 282mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220mm டிஸ்க் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
100/80-17M/C 52P முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 140/60R17M/C 63P ரேடியல் டயர் வழங்கப்பட்டு, முன்பக்கத்தில் 282mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220mm டிஸ்க் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது. மேட் ரெட், டார்க் மேட் ப்ளூ மற்றும் டார்க் நைட் ஆகியவற்றை பெற்றுள்ளது.
2023 யமஹா எஃப்இசட் எஸ் V3.0 எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,22,639 முதல் ₹ 1,23,139 (தமிழ்நாடு)
Yamaha FZ-S Fi V3.0 | |
Engine Displacement (CC) | 149 cc Air-cooled |
Power | 12.4 hp @ 7,250 rpm |
Torque | 13.3 Nm @ 5,500 rpm |
Gear Box | 5 Speed |
2023 யமஹா FZ-S Fi V3.0 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,39,675 முதல் ₹ 1,41,890 (DARK KNIGHT)
2023 Yamaha FZ V3
149சிசி அதிகபட்சமாக 12.4PS பவர் 7,250 r/min மற்றும் 13.3 N.m டார்க் 5,500 r/min வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. யமஹா FZ வரிசையில் குறைந்த விலை மாடலாக விற்பனை செய்யப்படுகின்றது.
மெட்டாலிக் கருப்பு மற்றும் ரேசிங் ப்ளூ நிறத்துடன் 100/80-17M/C 52P முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 140/60R17M/C 63P டயர் வழங்கப்பட்டு, முன்பக்கத்தில் 282mm டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 220mm டிஸ்க் வழங்கப்பட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
2023 யமஹா எஃப்இசட் V3 எக்ஸ்ஷோரூம் விலை ₹ 1,16,939 (தமிழ்நாடு)
Yamaha FZ V3.0 | |
Engine Displacement (CC) | 149 cc Air-cooled |
Power | 12.4 hp @ 7,250 rpm |
Torque | 13.3 Nm @ 5,500 rpm |
Gear Box | 5 Speed |
2023 யமஹா FZ V3.0 பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,35,656