கேடிஎம் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான 250 டியூக் பைக்கில் TFT கிளஸ்ட்டருடன் புதுப்பிக்கப்பட்ட 390 டியூக் பைக்கில் உள்ளதை போன்றே பூம்ரெங் வடிவ எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் எல்இடி ஹெட்லைட்டுடன் ரூ.2.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
முன்பாக சில மாதங்களுக்கு முன் புதிய நிறங்கள் மற்றும் டிசைன் மாற்றங்கள் பெற்றிருந்த டியூக் 250 தற்பொழுது மேலும் மேம்படுத்தப்பட்டு 5 அங்குல டிஎஃஎப்டி கிளஸ்டருடன் ப்ளூடூத் மூலம் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள், டர்ன் பை டர்ன் நேவிகேஷன், டிஜிட்டல் கிளஸ்ட்டரில் புதிய கிராஃபிக்ஸ் கொண்டிருக்கின்றது.
மற்றபடி, எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் வந்துள்ளது. 200 டியூக் மாடலும் இதே போன்ற மேம்பாட்டை பெற்றுள்ளது.
249சிசி என்ஜின் 9250rpm-ல் அதிகபட்சமாக 31PS பவர் மற்றும் 7250rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு சிலிப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.
முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ப்ரீ-லோட் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் கொண்டதாகவும், 176மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது.
முந்தைய மாடலை விட ரூபாய் 1,000 வரை மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் கேடிஎம் ஏஎம்டி கியர்பாக்ஸ் அறிமுகமானது