390 டியூக் பைக்கில் இருந்து பெறப்பட்ட புதிய 5 அங்குல டிஎஃப்டி டிஜிட்டல் கிளஸ்டர் பெறுகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான கேடிஎம் 200 டியூக் மாடல் பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறுகின்றது. இது தவிர எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை மற்றும் நிறங்களில் சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனில் கேடிஎம் கனெக்ட் செயலியை ப்ளூடூத் மூலம் இணைத்து டர்ன் பை டர்ன் நேவிகேஷன், அழைப்புகளை பெறும் வசதி, சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் சார்ந்த அம்சங்கள் ஆகியவற்றை பெறுகின்றது.
எலெக்ட்ரிக் ஆரஞ்சு, டார்க் கிளாவனோ, சில்வர் மெட்டாலிக் என மொத்தமாக மூன்று நிறங்களில் கிடைக்கின்ற 2024 மாடலில் தொடர்ந்து 199.5cc லிக்விட்-கூல்டு என்ஜினை பெறுகின்ற கேடிஎம் 200 டியூக் பைக் அதிகபட்சமாக 25 hp பவர் மற்றும் 19.3 Nm டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.
இந்த மாடலில் 300 மிமீ முன் டிஸ்க் பிரேக் மற்றும் 230 மிமீ பின்புற டிஸ்க் பிரேக்குடன் டூயல்-சேனல் சூப்பர் மோட்டோ ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சத்தை தொடர்ந்து கொண்டுள்ளது.
2024 கேடிஎம் 200 டியூக் பைக்கின் விலை ரூ.2.03 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) ஆகும். முந்தைய மாடலை விட ரூ.4,500 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.