9 ஆண்டுகளுக்கு பிறகு சிறிய அளவிலான மாறுதல்களை மட்டுமே பெற்றுள்ள 2025 பஜாஜ் பல்சர் RS200 பைக்கின் விலை ரூ.1.84 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டு வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களை கொண்டுள்ளது.
சமீபத்தில் வெளியான பல்சர் பைக்குகளில் இடம்பெற்றுள்ள எல்சிடி கிளஸ்ட்டரை கொண்டுள்ள RS200 பைக்கில் ப்ளூடூத் இணைப்புடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் அகியவற்றை கொண்டுள்ளது.
டிசைன் அமைப்பில் பெரிதாக மாற்றமில்லை என்றாலும், பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்இடி டெயில் லைட் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் ஒருங்கே இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சற்று மாறுபட்ட தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது. முன்புறத்தில் எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி புராஜெக்டர் கொடுக்கப்பட்டு பாடி கிராபிக்ஸ் சிறிய அளவிலான மாறுதல்களை கண்டுள்ளது.
ஆர்எஸ் 200 பைக்கில் 9750 rpm-ல் 24 bhp பவரை வழங்கும் 199.5cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8000 rpm -ல் 18.7Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் இடம்பெற்றிருக்கின்றது.
தொடர்ந்து முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்று 17 அங்குல வீல் கொண்டு முன்பக்கத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க், உடன் டூயல்-சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளது.
2025 பஜாஜ் பல்சர் RS200 எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,84,115 ஆகும்.