புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் கூடுதலான நிறங்கள் பெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் பிரபலமான 450X, 450S என இரண்டு மாடல்களும் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
ஸ்கூட்டரின் அடிப்படையான டிசைனில் எந்த மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படும் நிலையில் கூடுதலாக டிராக்ஷன் கண்ட்ரோல் சில வசதிகள் பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், AtherStack 6 மென்பொருள் மேம்பாடு கொண்டிருக்கலாம். மற்றபடி, கூடுதலாக சில நிறங்கள் பெறக்கூடும்.
தற்பொழுது விற்பனையில் உள்ள 450s ஸ்கூட்டரில் 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரு விதமான பேட்டரி பேக் பெற்றதாக உள்ளது. இதில் குறைந்த பேட்டரி திறன் பெற்ற வேரியண்ட் 115 கிமீ என IDC சான்றிதழ் உள்ள நிலையில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 85-90 கிமீ வரை கிடைக்கின்றது.
3.7Kwh பேட்டரி பெற்ற மாடல் 150 கிமீ என IDC சான்றிதழ் உள்ள நிலையில் உண்மையான பயணிக்கும் ரேஞ்ச் 120 கிமீ வரை கிடைக்கின்றது. தற்பொழுதுள்ள மாடலை விட கூடுதல் ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் பேட்டரி ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது. புதிய 2025 ஏதெர் 450X, 450S மாடலின் ரூ.1.30 லட்சம் முதல் ரூ.1.60 லட்சத்திற்குள் அமையலாம்.