ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அட்வென்ச்சர் ஸ்டைல் ஹிமாலயன் 452 பைக்கில் புதிய லிக்யூடூ கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 40 hp பவரை வழங்கும் 452cc என்ஜின் பொருத்தபட்டிருக்கும் நிலையில் புதிய நிறங்கள் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் விபரம் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள புதிய நான்கு நிறங்களில் ஒன்று மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்துடன், கிரே நிறத்தை பெற்ற சிவப்பு நிறம் டேங்க் கீழ் பகுதியிலும், அடுத்து கிரே நிறத்தை பெற்ற டேங்க் உடன் ப்ளூ நிறம் கீழே வழங்கப்பட்டுள்ளது.
Royal Enfield Himalayan 452
அட்வென்ச்சர் ரக ஹிமாலயன் 452 பைக் அதிகபட்சமாக 40 hp பவரை வெளிப்படுத்துகின்ற 451.65cc லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு 39-43 Nm வரை டார்க் வெளிப்படுத்தலாம். இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் கொண்டிருக்கலாம்.
ஹிமாலயன் 452 பைக்கில் வட்ட வடிவத்தை பெற்ற டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளதால், ப்ளூடூத் இணைப்பு மூலம் டிரிப்பர் நேவிகேஷன் வழங்கப்பட உள்ளது. டிரிப் மீட்டர், டேக்கோமீட்டர் உள்ளது.
முன்பக்கத்தில் 21 இன்ச், பின்புறத்தில் 17 இன்ச் வீலும் கொடுக்கப்பட்டு பைக்குகளின் இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்கு, டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டு 196 கிலோ எடை கொண்டுள்ளது. ஹிமாலயனின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 220 மிமீ ஆக இருக்கலாம்.
வரும் நவம்பர் 7 ஆம் தேதி புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 விலை ரூ.2.70 லட்சத்துக்குள் அமையலாம்.