ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ரெட்ரோ ஸ்டைல் பெற்ற மாடல்களுக்கு ஹைனெஸ் பேட்ஜ் அடிப்படையில் அடுத்த வரவுள்ள கஃபே ரேசர் ஸ்டைலுக்கு CB 350 RS என பெயரிடப்படலாம் என தகவல் கசிந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் ராயல் என்ஃபீல்டு, ஜாவா, பெனெல்லி இம்பீரியல் 400 ஆகிய மாடல்களுக்கு சவலாக விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹைனெஸ் சிபி 350 பைக்கின் மொத்த விற்பனை எண்ணிக்கை 10,000 கடந்துள்ளது. முன்பே இந்நிறுவனம் ஹைனெஸ் அடிப்படையில் பல்வேறு புதிய மாடல்கள் வெளியாகும் என குறிப்பிட்டிருந்த நிலையில் அடுத்த டீசர் சமீபத்தில் வெளியானது.
சிபி 350 பைக்கில் உள்ள 348.36சிசி லாங் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் அதிகபட்சமாக 5500 RPM-ல் 20.8 பிஹெச்பி பவர் மற்றும் 3000 RPM-ல் 30 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்ற இன்ஜினை இந்த பைக்கில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் சிலிப்பர் கிளட்ச் கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த டீசர் படத்தில் நேர்த்தியான எல்இடி டெயில் லைட், டர்ன் இன்டிகேட்டர் உட்பட இருக்கையின் மாறுபட்ட அமைப்பு கஃபே ரேசர் அல்லது ஸ்க்ராம்ப்ளர் மாடலுக்கு இணையாக அமைந்திருக்கின்றது. பெரும்பாலான இடங்களில் க்ரோம் பூச்சூகள் கொண்டிருக்கலாம்.
வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள மாடல் ஹைனெஸ் சிபி 350 மாடலை விட ரூ. 15,000 வரை கூடுதலாக அமைந்திருக்கலாம்.