ஹீரோ மோட்டோகார்ப் பிரீமியம் பைக் சந்தையில் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் எக்ஸ்ட்ரீம் 125 ஆர் மற்றும் எக்ஸ்ட்ரீம் 200 ஆர் 4வி என இரண்டு பைக்குகள் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் வெளியாகியுள்ளது.
125சிசி சந்தையில் உள்ள ரைடர் 125 , எஸ்பி 125 மற்றும் பல்சர் 125 பைக்குகளை எதிர்கொள்ளும் வகையில் விற்பனைக்கு எக்ஸ்ட்ரீம் 125 ஆர் வெளியாக உள்ளது.
Hero Xtreme 125R and Xtreme 200R 4V
சில வாரங்களுக்கு முன்பாக எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும் படங்கள் வெளியாகியிருந்தது. ஹெட்ல்டை அமைப்பில் எல்இடி விளக்குகள் இடம்பெற்றிருக்கலாம். அடுத்தப்படியாக, பெட்ரோல் டேங்க் பகுதியில் எக்ஸ்டென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
இரு பிரிவுகளாக கொண்ட 6 ஸ்போக் 17 அங்குல அலாய் வீல், இரு பிரிவுகளை பெற்ற ஸ்பிளிட் இருக்கை, முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் டிரம் பிரேக் கொண்டு, எல்இடி டெயில் விளக்கு பெற்றுள்ளது. சோதனை ஓட்டத்தில் உள்ள 125சிசி மாடல் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.
சமீபத்தில் நீக்கப்பட்ட நேக்டூ ஸ்டைல் எக்ஸ்ட்ரீம் 200ஆர் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு மிக நேர்த்தியான டிசைன் அம்சங்களை கொண்டதாக H வடிவ ஹெட்லைட் அமைப்பினை கொண்டுள்ளது. 200 எஸ் பைக்கில் 4 வால்வு கொண்ட மாடல் வரவுள்ள நிலையில் அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளலாம் அல்லது கூடுதலான பவர் வழங்கும் புதிய என்ஜினை எதிர்பார்க்கலாம்.