ஜனவரி 22 ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக பிரீமியம் சந்தையில் 440சிசி என்ஜின் பெற்ற முதல் மாடலை மேவ்ரிக் (Mavrick) என்ற பெயரை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் அனேகமாக அட்வென்ச்சர் ஸ்டைல் அல்லது ரோட்ஸ்டெர் ரக பிரிவில் வெளியாக வாய்ப்புள்ளது.
ஹீரோ மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் முதல் மாடலாக X440 விற்பனைக்கு வெளியான நிலையில் தற்பொழுது இதே பிளாட்ஃபாரத்தில் மேவ்ரிக் 440 வெளியாகும்.
Hero Mavrick 440
ஹூராகேன் என்ற பெயரை எதிர்பார்த்த நிலையில் இறுதியாக ஹீரோ தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள டீசர் மூலம் ஒவ்வொரு எழுத்தாக ஊடகங்களுக்கு அனுப்பியிருந்த நிலையில் M,V,R,K, என்ற ஆங்கில எழுத்துக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Maverick என்ற பெயரில் இருந்து Mavrick என உருவாக்கியுள்ளது. மேவ்ரீக் என்றால் மாவீரன் என்பது பொருள்பட ஹீரோ மோட்டோகார்ப் காப்புரிமை பெற்றுள்ளது. எனவே, இந்த மாடல் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு கடும் சவாலினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மேவ்ரிக் 440 பைக்கில் பொருத்தப்பட உள்ள 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 38 Nm டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் கொண்டிருக்கும். புதிய மாடலுக்கு பவர் மற்றும் டார்க் ஆனது கூடுதலாக வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.
பிரேக்கிங் அமைப்பில் 320 mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 240 mm டிஸ்க் பிரேக்குடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் ஆனது பொருத்தப்பட்டிருக்கின்றது.
Finally upcoming thirller is called Hero Mavrick #heromavrick
— Automobile Tamilan (@automobiletamil) January 3, 2024
ஜனவரி மாதம் வெளியாக உள்ள ஹீரோ மேவ்ரிக் 440 முன்பதிவு உடனடியாக துவங்கப்பட்டு மார்ச் 2024 முதல் டெலிவரி துவங்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க – 2024ல் வரவிருக்கும் ஹீரோ பைக் மற்றும் ஸ்கூட்டர்கள்