ஹீரோ மோட்டோகார்ப் முதன்முறையாக DOHC, டூயல் சேனல் ஏபிஎஸ், லிக்யூடு கூல்டு என்ஜின் என பலவற்றை கொண்டு வரவுள்ள மாடல் கரீஸ்மா XMR 210 பைக் பற்றி தற்பொழுது வரை வெளிவந்த அனைத்து தகவல்களையும் தொகுத்து அறிந்து கொள்ளலாம்.
ஏற்கனவே, ஹீரோ டீலர்களுக்கு காட்சிப்படுத்திய பொழுதே கரீஸ்மா பைக்கின் படம் வெளியானதை தொடர்ந்து பல்வேறு டீசர்கள் மூலம் பைக் விலை எதிர்பார்ப்புகள் வரை வெளியாகியுள்ளது.
Hero Karizma XMR 210
முழுமையான ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் பைக் மாடலான கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கில் முழு எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட் மற்றும் ஸ்பிளிட் இருக்கை அமைப்பு பெற்று மஞ்சள் மற்றும் சிவப்பு என இரு நிறங்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக கருப்பு நிறத்தை பெறக்கூடும்.
பிரேக்கிங் ஆனது இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இருவிதமான வேரியண்டுகளை பெற வாய்ப்புள்ளது. மேலும் இந்த மாடலின் டாப் வேரியண்டில் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை வழங்க எல்சிடி கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு ஹீரோ கனெக்டேட் 2.0 அம்சத்தை பெற்றக்கூடும்.
கரீஸ்மா மாடலில் 210சிசி லிக்யூடு கூல்டு DOHC (Double Overhead Camshaft) என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 25 ஹெச்பி பவர் வெளிப்படுத்தக்கூடும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்று, இந்தியாவின் மிக வேகமான 200சிசி பிரிவு பைக் மாடலாக விளங்கலாம். 2023 ஹீரோ கரீஸ்மா XMR பைக்கின் மைலேஜ் சராசரியாக 32.8 kmpl கிடைக்க உள்ளது. இந்த பைக்கின் டாப் மணிக்கு 150 கிமீ வரை எட்டக்கூடும்.
விலை தொடர்பாக ஹீரோ வெளியிட்டுள்ள டீசரில் கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் விலை ரூ.2.05 லட்சம் முதல் ரூ.2.20 லட்சத்திற்குள் அமையலாம் என குறிப்பிட்டுள்ளது. இந்த மாடல் பஜாஜ் பல்சர் RS 200, யமஹா R15 மற்றும் சுசூகி ஜிக்ஸர் SF 250 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.