பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள டீசர் மூலம் பல்சர் சீரிஸில் பெரிய என்ஜின் பெற உள்ள பல்சர் NS400 விற்பனைக்கு வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதை உறுதியாகியுள்ளது.
350-500cc பிரிவில் இந்நிறுவனம் டோமினார் 400 மாடலை விற்பனை செய்து வருகின்ற நிலையில் கூடுதலாக பல்சர் வரிசையில் வரவுள்ள ஸ்போர்ட்டிவ் நேக்டு மாடல் அனேகமாக புதிய கேடிஎம் 390 டியூக் மற்றும் டிரையம்ப் 400 ட்வீன் பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற 399cc இயந்திரத்தை பயன்படுத்திக் கொள்ள உள்ளது.
Bajaj Pulsar NS400
சந்தையில் 125cc முதல் 250cc வரையில் ஸ்போர்ட்டிவ் மாடலாக விளங்கும் நிலையில் கூடுதலாக வரவுள்ள பெர்ஃபாமென்ஸ் ரக பல்சர் என்எஸ்400 பைக்கில் 44.25 bhp பவர் மற்றும் 39Nm டார்க் வழங்குகின்ற நிலையில் 399cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு இயந்திரம் பொருத்தப்படலாம். இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் பெறுகின்றது. கூடுதலாக, ஸ்லிப்ப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் இருக்கலாம். அல்லது முந்தைய 373cc இயந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளுமா என உறுதியாக தெரியவில்லை.
டீசர் மூலம் கிடைத்துள்ள அம்சங்களில் ஸ்போர்ட்டிவ் தன்மையை கொண்டு எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் பெற்றதாகவும், அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர், ஸ்போர்ட்டிவான ரியர்-வியூ கண்ணாடிகள், பெரிய பெட்ரோல் டேங்கில் எக்ஸ்டென்ஷன், ஸ்பிளிட் இருக்கைகள் கூர்மையான பேனலிங், ஸ்போர்ட்டிவ் பாடி கிராபிக்ஸ், அண்டர்பெல்லி எக்ஸாஸ்ட் மற்றும் ரியர் டயர் ஹக்கர் உள்ளது.
பல்சரின் என்எஸ்400 பைக்கில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்று ரைட் கனெக்ட் ஆப் வசதியுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன், மொபைல் தொடர்பான அறிவிப்புகளை பெறக்கூடும். புதிய பஜாஜ் பல்சர் NS400 பைக்கின் விலை ரூ.2.40 லட்சத்தில் துவங்க வாயப்ப்புகள் உள்ளது.