பஜாஜ் ஆட்டோவின் பிரசத்தி பெற்ற பல்சர் N150 பைக்கின் மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளதால் புதிய மாடல் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கனெக்ட்டிவிட்டி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தற்பொழுது விற்பனையில் உள்ள பல்சரின் என்150 பைக்கின் அடிப்படையான டிசைன் அம்சங்களில் பெரிதாக மாற்றமில்லாமல் புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் ஸ்டைலிங் சார்ந்த மேம்பாடுகளை மட்டுமே பெற்றிருக்கும்.
2024 Bajaj Pulsar N150
பஜாஜ் பல்சர் N150 பைக்கில் தொடர்ந்து 150cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 14.5hp பவர் மற்றும் 13.5Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் இந்த மாடலில் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் பெறுகிறது.
வெளியிடப்பட்டுள்ள டீசர் மூலம் புதிய பல்சர் 150 பைக்கின் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை, புதிய நிறங்கள் மற்றும் பாடி கிராபிக்ஸ் உடன் கிளஸ்ட்டரில் டிஎஃப்டி டிஸ்பிளே உடன் பஜாஜ் இதற்காக பிரத்தியேகமான செயலி மூலம் ஸ்மார்ட்போன் ப்ளூடூத் இணைப்பினை ஏற்படுத்தினால் கனெக்ட்டிவிட்டி வசதிகள் கொண்டிருக்கலாம். கைப்பிடிகளில் வழங்கப்பட்டுள்ள சுவிட்சுகள் மாற்றப்படிருக்கும்.
15-160சிசி சந்தையில் உள்ள மற்ற போட்டியாளர்களில் டிவிஎஸ், யமஹா, ஹீரோ உள்ளிட்ட நிறுவனங்கள் இணைப்பு தொடர்பான அம்சங்களை கொண்டுள்ளது. எனவே, பல்சர் என்150 விலை ரூ.1.18 லட்சம் ஆக கிடைத்து வருவதனால் சில ஆயிரங்கள் உயர்த்தப்படலாம்.
2024 பஜாஜ் பல்சர் என்150 விற்பனைக்கு அனேகமாக ஜனவரி மாத இறுதி வாரம் வெளியிடப்படலாம்.