நடப்பு 2025 ஆம் ஆண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேக்ஸி ஸ்டைல் ஜூம் 160, ஸ்போர்ட்டிவ் ஜூம் 125R, குடும்பங்களுக்கான டெஸ்டினி 125 மற்றும் விடா ஜீ எலெக்ட்ரிக் என நான்கு மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
2023 EICMA அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஜூம் 125ஆர் மற்றும் ஜூம் 160 என இரண்டும் விற்னைக்கு நடப்பு ஆண்டில் வெளியாகுவது உறுதியாகி உள்ள நிலையில், ஏற்கனவே இரண்டு மாடல்களும் சோதனை ஓட்டத்தில் உள்ளது.
மேக்ஸி ஸ்டைல் Xoom 160
இந்தியாவில் தற்பொழுது பெரிய அளவில் மேக்ஸி ஸ்டைல் ஸ்கூட்டர்களுக்கு வரவேற்ப்பில்லை என்றாலும், மாறி வரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்பவும் பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மேக்ஸி ரகத்தில் முதல் ஜூம் 160 மாடலை வெளியிட உள்ளது. இந்த மாடலில் புதிய லிக்யூடு கூல்டு 156cc, ஒற்றை சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 14hp பவர் மற்றும் 6,500rpm-ல் 13.7Nm டார்க் வழங்குகின்றது.
டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெறுகின்ற இந்த மாடலில் ப்ளூடூத் இணைப்பினை கொண்டு கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உள்ளிட்ட வசதிகளுடன் ரிமோட் கீ வழங்கப்பட்டு இருக்கை திறக்க, என்ஜின் ஸ்டார்ட் செய்ய இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஜூம் 160 விலை ரூ. 1.30 லட்சத்தில் விற்பனைக்கு வரக்கூடும் முக்கிய விபரங்கள் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் எதிர்பார்க்கலாம்.
ஹீரோ Xoom 125R
ஹீரோவின் புதிய ஸ்போர்ட்டிவ் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக் கூடிய 125ஆர் மாடலில் 124.6cc என்ஜின் 9.5hp பவர் மற்றும் 10.14Nm டார்க் வழங்குகின்றது. இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் கிளஸ்ட்ட கனெக்ட்டிவிட்டி வசதிகள், செக்வென்ஷியல் எல்இடி இண்டிகேட்டர் பெற்றுள்ளது.
14 அங்குல அலாய் வீல் பெற்று முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக்கும் கொண்டு வழக்கமான டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ஒற்றை ஷாக் அப்சார்பர் பின்பக்கத்தில் கொண்டுள்ளது.
இந்தியாவில் ஹீரோ ஜூம் 125ஆர் விலை ரூ.92,000 விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹீரோ Destini 125
ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் விலை பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிவிக்கப்பட உள்ள, இந்த மாடலில் 124.6cc ஏர்-கூல்டூ 4 ஸ்ட்ரோக் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7000 rpm-யில் 9bhp பவர் மற்றும் 10.4Nm டார்க் ஆனது 5500 rpm-ல் வழங்குகின் இந்த ஸ்கூட்டரின் மைலேஜ் லிட்டருக்கு 59 கிமீ வெளிப்படுத்தலாம்.
இரு பக்க டயரிலும் 90/90-12 அங்குல வீல் கொடுக்கப்பட்டு, டிரம் அல்லது டிஸ்க் என முன்பக்கத்தில் பெற்று பின்புறம் டிரம் பிரேக்குடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெற்று விலை ரூ.81,000 முதல் ரூ.93,000 வரை அமையலாம்.
Vida Z எலெக்ட்ரிக்
EICMA 2025ல் காட்சிப்படுத்தப்பட்ட விடா ஜீ ஸ்கூட்டரில் 2.2Kwh முதல் 4.4 kwh வரை மாறுபட்ட பேட்டரி திறனுடன் சுமார் 80-200 கிமீ ரேஞ்ச் வழங்கும் வகையில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், மற்ற வசதிகளாக டிஎஃப்டி கன்சோல், வாகனத்தின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் திறன், திருட்டு எச்சரிக்கைகள், ஜியோஃபென்சிங் மற்றும் வாகன அசையாமை போன்ற அம்சங்கள் இருக்கும். ஸ்கூட்டருக்கு OTA (ஒவர்-தி-ஏர்) மூலம் புதுப்பிப்புகளும் கிடைக்கும்.
ஜீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.90,000 முதல் துவங்கலாம் என கூறப்படுகின்றது.