அல்ட்ராவைலெட் நிறுவனம் ஸ்போர்ட்டிவ் எலக்ட்ரிக் பைக்கினை விற்பனை செய்து வரும் நிலையில் புதிய டெசராக்ட் ஸ்கூட்டரை 3.5Kwh, 5Kwh மற்றும் 6 Kwh என மூன்று வித பேட்டரி ஆப்ஷனில் ரூ.1.20 லட்சம் அறிமுக சலுகை விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் முன்பதிவு துவங்ககப்பட்டு டெலிவரி 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதுதவிர இந்நிறுவனம், ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மின்சார ஷாக்வேவ் பைக்கினை அறிமுகம் செய்துள்ளது.
Ultraviolette Tesseract
அதிநவீன பாதுகாப்பு சார்ந்த வசதியை ரைடருக்கு வழங்கும் வகையில் ரேடார் அடிப்படையிலான பாதுகாப்பு கேமரா முன் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்டு அருகாமையில் உள்ள பிளைன்ட் ஸ்பாட் வாகனங்கள், கடக்கும் வாகனங்கள், மோதலை தடுக்கும் வசதி போன்றவை பெற்ற முதல் ஸ்கூட்டர் மாடலாக டெசராக்ட் விளங்குகின்றது. டேஸ்கேமரா வசதியுடன், பல்வேறு கனெக்ட்டிவிட்டி வழங்குகின்ற 7 அங்குல தொடுதிரை கிளஸ்ட்டரை பெற்றுள்ளது.
14 அங்குல வீல் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் , டைனமிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உட்பட ஹீல் ஹோல்டு அசிஸ்ட் ஆகியவற்றுடன் கீலெஸ் அக்செஸ், வயர்லெஸ் முறையில் போன் சார்ஜிங் கொண்டு 34 லிட்டர் கொள்ளளவு பெற்ற ஸ்டோரேஜ் உள்ளது.
சேன்ட், பிங்க், வெள்ளை, மற்றும் கருப்பு என நான்கு நிறங்களை பெற்று 0-60 கிமீ வேகத்தை வெறும் 2.9 விநாடிகளில் எட்டுவதுடன் டாப் ஸ்பீடு மணிக்கு 125 கிமீ ஆகவும் பவர் 20hp ஆக உள்ளது. விரைவு சார்ஜிங் முறையில் 20-80% சார்ஜிங் பெற 30 நிமிடங்கள் போதுமானதாகும்.
3.5Kwh பேட்டரி கொண்ட மாடல் முழுமையான சிங்கிள் சார்ஜில் 162 கிமீ , 5Kwh பேட்டரி பேக் கொண்ட மாடல் 220 கிமீ ரேஞ்ச் மற்றும் 6 Kwh பெற்ற டாப் மாடல் 261 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் வாங்கும் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ.25,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 3.5Kwh பேக் விலை ரூ.1.45 லட்சம் ஆகும். ஆனால் மற்ற இரு பேட்டரி பேக்கின் விலை தற்பொழுது அறிவிக்கப்படவில்லை. இந்த ஸ்கூட்டரின் டெலிவரி 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெற உள்ளது.