Bike News டிவிஎஸ் எக்ஸ்எல் எலக்ட்ரிக் மொபெட் அறிமுக விபரம் Last updated: 13,March 2024 6:23 am IST நிவின் கார்த்தி - Editor Share TVS-XL-100டிவிஎஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எக்ஸ்எல் 100 மொபெட்டின் அடிப்படையில் எலக்ட்ரிக் மாடல் TVS E-XL மற்றும் TVS XL-EV என இரண்டு பெயர்களுக்கான வர்த்தக முத்திரையை பதிவு செய்துள்ளது.மாதந்தோறும் 35,000-40,000 எண்ணிக்கைக்கு கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்ற எக்ஸ்எல் 100 மொபெட்டின் விலை ரூ,44,999 முதல் ரூ.54,659 ஆக எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரவுள்ள பேட்டரி ஆப்ஷனில் வரும் பொழுது ரூ.ரூ.60,000 முதல் ரூ.70,000 விலைக்குள் துவங்க வாய்ப்புள்ளது.தற்பொழுது விற்பனையில் உள்ள எக்ஸ்எல் 100 மொபெட்டின் அடிப்படையான கட்டுமானத்தை பெற்றதாக ஒரே மாதிரியாக அமைந்துள்ள இந்த மாடல் என்ஜினுக்கு பதிலாக பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். மற்றபடி, ஃபுளோர் போர்டு , பின்புற இருக்கை வழக்கம் போல சீட் நீக்கும் வகையில் அமைந்திருக்கும்.மற்ற அம்சங்களான டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வீன் ஷாக் அப்சார்பர் கொண்டதாகவும், இருபக்க டயரிலும் டிரம் பிரேக் பெற்றதாகவும் வயர் ஸ்போக் வீல் உடன் 16 அங்குல வீல் ட்யூப் டயருடன் அமைந்திருக்கலாம்.இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஓசோடெக் பீம், கைனெடிக் இ-லூனா ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ள டிவிஎஸ் எக்ஸ்எல் எலக்ட்ரிக் மொபெட் அறிமுகம் இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளியாக உள்ளது. TAGGED:TVSTVS E-XLTVS XL-EV Share This Article Facebook Previous Article ஹீரோ வெளியிட உள்ள இரண்டு ஜூம் ஸ்கூட்டர்களின் விபரம் Next Article ஹூண்டாய் க்ரெட்டா Vs க்ரெட்டா என்-லைன் வித்தியாசங்கள் என்ன..!