டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், அப்பாச்சி சீரிஸ்களில் ஏபிஎஸ் இணைத்தை தொடர்ந்து டிவிஎஸ் விக்டர் பைக்கில் எஸ்பிடி பாதுகாப்பு அம்சத்துடன் ரூ. 54,682 தொடக்க விலையிஃ விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
டிவிஎஸ் எஸ்பிடி எனப்படுவது சிங்ரனைஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் (Synchronized Braking Technology- SBT) ஆகும். சிபிஎஸ் பிரேக் எனப்படுவது பின்புற பிரேக்கினை இயக்கினால் கனிமான பிரேக்கிங் திறனை முன்புற பிரேக்கிற்கும் வழங்கும் அமைப்பாகும். இதன் மூலம் பைக்கின் பிரேக்கிங் திறன் அதிகரிக்கப்படுகின்றது.
டிவிஎஸ் விக்டர் பைக்கில் எஸ்பிடி அம்சம்
வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பொருத்தப்பட்ட பைக்குகள் மட்டும் இந்தியாவில் விற்பனை செய்ய இயலும். குறிப்பாக 125சிசி மற்றும் அதற்கு மேலான திறன் பெற்ற மாடல்களில் ஏபிஎஸ் பிரேக், 125சிசிக்கு கீழ் உள்ள அனைத்திலும் சிபிஎஸ் எனப்படும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும்.
டிரம் பிரேக் மாடல் மற்றும் டிஸ்க் பிரேக் என இருவிதமான மாடல்களில் விற்பனை செயப்படுகின்ற டிவிஎஸ் விக்டர் பைக்கில் 110சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 9.5 பிஎச்பி பவரையும், 9.4 என்எம் டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
டிவிஎஸ் மோட்டாரின் விக்டர் பைக் மாடலில் குறிப்பாக டிஸ்க் பிரேக் பெற்ற வெர்ஷனில் பிரிமியம் எடிசன் மாடலில் குறிப்பாக ஸ்டைலிஷான பாடி கிராபிக்ஸ், இரு நிற கலவை பெற்ற இருக்கைகள், க்ரோம் பூச்சை பெற்ற கிராஷ் கார்டு, பேனல்கள் கொண்டதாக நான்கு நிறங்களில் கிடைக்கின்றது.
சாதாரண மாடலை விட எஸ்பிடி பிரேக் பெற்ற மாடல் விலை ரூபாய் 640 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய விஎஸ் விக்டர் பைக்கின் டிரம் பிரேக் மாடல் விலை ரூபாய் 54,682 எனவும், டிஸ்க் பெற்ற மாடல் ரூபாய் 56,682 மற்றும் டிஸ்க்குடன் கூடிய விக்டரின் பிரிமியம் எடிசன் விலை ரூபாய் 57,662 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.