வருகின்ற பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடுதலான வசதிகளை பெற்ற டிவிஎஸ் விக்டர் பிரிமியம் எடிசன் பைக் புதிய நிறத்தில் கூடுதலான பாடி கிராபிக்ஸ் பெற்றதாக எஞ்சினில் எவ்விதமான மாற்றம் இல்லாமல் வெளியாகியுள்ளது.
டிவிஎஸ் விக்டர் பிரிமியம் எடிசன்
110சிசி சந்தையில் மீண்டும் விற்பனைக்கு வெளியிடப்பட்ட விக்டர் பைக் அடிப்படையில் கூடுதலான நிற மாற்றத்தை பெற்ற இந்த மாடலில் 3 வால்வுகளை பெற்ற 110சிசி ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு 9.5 ஹெச்பி பவர் மற்றும் 9.4 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. டிவிஎஸ் விக்டர் பைக் மைலேஜ் லிட்டருக்கு 76 கிமீ என ஆராய் சான்று வழங்கியுள்ளது.
டிஸ்க் பிரேக் பெற்ற மாடலில் மட்டும் விக்டர் பிரிமியம் எடிசன் கருப்பு நிறத்துடன் மஞ்சள் பாடி கிராபிக்ஸ் பெற்று கருப்பு நிற கிராப் ரெயில், எஞ்சினில் கோல்டு கவர் ஃபினிஷ் செய்யப்பட்டு எல்இடி ரன்னிங் விளக்குகள், ட்யூப்லெஸ் டயர் ஆகியவற்றை பெற்றுள்ள மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் சாக் அப்சார்பர் கொண்டுள்ள, இந்த பைக்கில் முன் சக்கரத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் பெற்றுள்ள நிலையில் டிரம் வேரியன்டில் 130மிமீ மற்றும் 110மிமீ பின்சக்கரத்தில் பெற்றுள்ளது.
சாதாரண டிவிஎஸ் விக்டர் பைக் மொத்தம் 6 விதமான நிறங்களில் கிடைக்கின்றது. விக்டர் பிரிமியம் எடிசன் கருப்பு நிறத்தில் மஞ்சள் கிராபிக்ஸ் பெற்றதாக வந்துள்ளது.
சாதாரண மாடலை விட ரூ.800 வரை கூடுதலாக அமைந்துள்ள டிவிஎஸ் விக்டர் பிரிமியம் எடிசன் பைக் விலை ரூ.55,065 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)
சமீபத்தில் டிவிஎஸ் நிறுவனம் இருவிதமான கலவை பெற்ற டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.