புதிய மேட் சீரிஸ் நிறங்கள் , கூடுதல் வசதிகள் மற்றும் பிஎஸ் 4 எஞ்சினை பெற்ற 2017 டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 மாடல் ரூ. 50,826 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர ஜெஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் சீரிஸ் ரூ. 48,786 விலையில் கிடைக்கும்.
டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110
புதிய ஸ்கூட்டி ஜெஸ்ட் மாடலில் பாரத் ஸ்டேஜ் 4 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற 110 cc ஒற்றை உருளை பெற்ற எஞ்சின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம் சுழற்சியில் 8 பிஹெச்பி பவரும், அதிகபட்சமாக 5500 ஆர்பிஎம் வேக சுழற்சியில் 8.7 என்எம் டார்க் வழங்கும் திறன் கொண்டதாகும். இந்த ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 62 கிமீ ஆகும்.
புதிய ஜெஸ்ட் 110 ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேட் வரிசை வண்ணங்களில் நீலம், மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு ஆகியவை கிடைப்பதுடன், ஹிமாலயன் ஹைஸ் சீரிஸ் மாடலில் நீலம், பிங்க், பீச் மற்றும் ஆரஞ்சு வண்ணங்கள் என மொத்தம் 8 நிறங்கள் கிடைக்கிற்றது. புதிய மேட் சீரிஸ் மாடலில் 3டி லோகோ, யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி, பகல் நேரத்தில் ஒளிரும் எல்இடி விளக்குகள் , க்ளோவ் பாக்ஸ், இரு வண்ண கலவை இருக்கை போன்றவற்றுடன் விளங்குகின்றது.
உலகின் மிக உயரமான மோட்டார் சாலை எனப்படும் கர்துங்லா பாஸ் வழியாக பயணித்த முதல் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் என்ற பெருமையை ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 பெற்றுள்ளது. இதன் திறனை போற்றும் வகையிலே ஹிமாலயன் ஹைஸ் சீரிஸ் கிடைக்கின்றது.
டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபிடர் , ஸ்கூட்டி பெப் + போன்ற மாடல்களை தொடர்ந்து அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்கூட்டர் மாடலாக ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 விளங்குகின்றது.
ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 விலை
- ஹிமாலயன் ஹைஸ் சீரிஸ் – ரூ. 48,786
- ஜெஸ்ட் 110 மேட் சீரிஸ் – ரூ. 50,826