டிவிஎஸ் மோட்டாரின் நான்காவது ஆண்டு மோட்டோசோல் அரங்கில் புதிய RTX D4 299.1cc எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அனேகமாக 2025 இல் விற்பனைக்கு வரவுள்ள புதிய டிவிஎஸ் RTX அட்வென்சர் பைக்கில் இடம்பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
TVS RT-XD4 engine
எஞ்சின் ஹெட் பகுதிக்கு லிக்யூடூ மற்றும் கிராங் பகுதிக்கு ஏர் ஆயில் கூல்டூ என இரண்டும் ஒருங்கே இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள ஆர்டி-எக்ஸ்டி4 போர் மற்றும் ஸ்ட்ரோக் புள்ளிவிவரங்கள் 78 மிமீ x 62.6 மிமீ பெற்ற புதிய 299.1cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,000 rpmல் 35hp பவர் மற்றும் 7,000 rpmல் 28.5 Nm வெளிப்படுத்துகின்றது. இந்த எஞ்சினில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், ரைடு-பை-வயர் த்ரோட்டில் சிஸ்டம், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளது.
ஓசூரில் உள்ள R&D மையத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய எஞ்சின் ஆனது டூயல் ஓவர் ஹெட் கேம் கொண்டிருப்பதுடன் மிகச் சிறப்பான வகையில் பெர்ஃபார்மன்ஸ் வெளிப்படுத்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிராங்க் கேஸ் பகுதிக்கு மிக சிறப்பான வகையில் லூப்ரிகேஷன் வழங்க டூயல் ஆயில் பம்ப் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. டூயல் கூலிங் ஜாக்கெட் ஆனது சிலிண்டர் ஹெட் பகுதிக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற லிக்விட் கூல்ட் அமைப்பாகும்.
சிறப்பான வகையில் ஆயில் அளவினை பராமரிக்கவும் அதே நேரத்தில் அதிகப்படியான ஆயில் செலவாகுவதினை தடுக்கும் வகையிலான டூயல் பிரித்தெர் சிஸ்டமானது சேர்க்கப்பட்டிருக்கின்றது.
என்ஜின் கேஸ் பகுதியில் பிளாஸ்மா ஸ்ப்ரே பெயிண்டிங் செய்யப்பட்டு இருப்பதுடன் மிகச் சிறப்பான வகையில் தெர்மல் மேனேஜ்மென்ட் செய்வதனால் வெப்பத்தை ரைடர் கால்களுக்கு கடத்தாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த எஞ்சின் ஆனது மிகச் சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் வழங்குவதுடன் அதே நேரத்தில் எத்தனால் எரிபொருள்களையும் பயன்படுத்தும் வகையிலான வடிவமைப்பினை கொண்டிருப்பதனால் எதிர்காலத்தில் எத்தனால் சார்ந்த மாடலாகவும் மாற்றிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.