125சிசி சந்தையில் டிவிஎஸ் விற்பனை செய்து வருகின்ற ரைடர் 125 மாடலின் 10 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ளதை முன்னிட்டு கூடுதலாக 125சிசி சந்தையில் உள்ள அதிகரித்துள்ள போட்டியை எதிர்கொள்ளும் வகையில் ரைடர் iGo பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
விற்பனையில் உள்ள ரைடர் 125 பைக்கில் Integrated Starter Generator (ISG) மட்டும் பெற்றிருந்த நிலையில் கூடுதல் டார்க் மற்றும் 10 % வரை எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் வெளியிடபட்டுள்ள ரைடர் iGo (Intelligent Go Assist) ஆனது முதன்முறையாக டிவிஎஸ் நிறுவனத்தின் 2024 ஜூபிடர் 110 மாடலில் கொண்டு வரப்பட்டிருந்தது. வழக்கமான மற்ற ரைடர் மாடலை விட 0.55 Nm வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
3 வால்வுகளை கொண்ட 124.8 cc எஞ்சின் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் புதிதாக வந்துள்ள igo assist வேரியன்ட் டார்க் ஆனது 11.75 Nm ஆக வெளிப்படுத்தும் என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் மற்றும் வசதிகள் சார்ந்தவற்றில் ஸ்பிளிட் சீட் மாடலை போலவே உள்ளது.
குறிப்பாக இந்த மாடலுக்கு என பிரத்தியேகமாக டொரோன்டோ கிரே என்ற நிறம் வழங்கப்பட்டு அலாய் வீல்களில் சிவப்பு நிறம் உள்ளதால் கவர்ச்சிகரமாக இளைய தலைமுறையினரை கவரும் வகையில் ரைடர் வந்துள்ளது.
125சிசி சந்தையில் உள்ள ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் பெற்ற ஹோண்டா எஸ்பி125, ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர், பல்சர் என்எஸ்125, மற்றும் புதிதாக வந்துள்ள பல்சர் N125 ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
- Raider Drum – ₹ 88,807
- Raider Single Seat – ₹ 99,807
- Raider Split Seat – ₹ 99,990
- Raider iGo – ₹ 1,01,190
- Raider SSE – ₹ 1,04,927
- Raider SX – ₹ 1,10,007
(EX-showroom Tamil Nadu)