டிவிஎஸ் நிறுவனத்தின் பிரபலமான ரேடியான் பைக்கில் கம்யூட்டர் ஆஃப் தி இயர் என்ற பெயரில் ஸ்பெஷல் எடிஷனை விற்பனைக்கு க்ரோம் பிளாக் மற்றும் க்ரோம் பிரவுன் என இரு நிறங்களில் வெளியிட்டுள்ளது.
கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் பிரிவில் இந்த ஆண்டில் அதிகபட்ச விருதுகளை வென்றுள்ள ரேடியானில் தொடர்ந்து 109.7cc, சிங்கிள்-சிலிண்டர், 3-வால்வ், ஏர்-கூல்டு என்ஜினை கொண்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 7,000 rpm-ல் 8.3bhp பவரும், 8.7Nm பீக் டார்க்கை 5,000rpm-ல் வழங்குகின்றது. இந்த 110cc பைக், அதிகபட்சமாக லிட்டருக்கு 69.3 கிமீ மைலேஜ் தரவல்லதாகும் என்று டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
10 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்கை கொண்டுள்ள ரேடியான் ஸ்பெஷல் எடிசனில், பெட்ரோல் டேங்கில் உள்ள குஷனில் R என்ற பேட்ஜ், புதிய பிரீமியம் பாடி கிராபிக்ஸ், க்ரோம் ரியர் வியூ மிரர், க்ரோம் கார்புரேட்டர், மற்றும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் கொண்டுள்ளது.
2 லட்சத்துக்கும் அதிகமான ரேடியான் பைக்குகளை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
அறிமுகம் குறித்து டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் கம்யூட்டர் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்ப்பரேட் பிராண்டின் துணைத் தலைவர் (சந்தைப்படுத்தல்) திரு அனிருத்த ஹல்தார் கூறுகையில், “டிவிஎஸ் ரேடியான் வல்லுநர்களிடமிருந்தும் நுகர்வோரிடமிருந்தும் மிக சிறப்பான ஆதரவை பெற்றுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வருடத்திற்குள் 2 லட்சம் பெருமைமிக்க நுகர்வோர்களால் தேர்ந்தகடுக்கபட்டுள்ளது. அத்தகைய நுகர்வோரின் நம்பிக்கையும் அன்பும் அவர்கள் மீதான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. டிவிஎஸ் ரேடியான், நிபுணர்களின் பாராட்டைப் பெற்றதால், இந்த ஆண்டின் மிகவும் அதிக விருது பெற்ற மோட்டார் சைக்கிள் ஆனது. சிறப்பு பதிப்பு டிவிஎஸ் ரேடியான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என குறப்பிட்டுள்ளார்.
டிவிஎஸ் ரேடியான் ஸ்பெஷல் எடிசன் விலை ரூ. 54,665 முதல் ரூ.56,765 வரை ஆகும்.