தமிழகத்தை மையமாக கொண்டு செயல்படுகின்ற டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் சிறப்பான பங்களிப்பினை பெற்றிருக்கின்ற நிலையில் மின்சார ஸ்கூட்டரை உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்
தற்போது டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் ஜூபிடர் , ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 போன்ற மிக சிறப்பான ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக 125சிசி சந்தையில் புதிதாக ஸ்கூட்டர் ஒன்றை பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரை தயாரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசுகள் மற்றும் மோட்டார் நிறுவனங்கள், டிவிஎஸ் நிறுவனமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.
இருசக்கர வாகனங்களில் பேட்டரி கொண்டு இயங்கும் மோட்டார் சைக்கிள் வாகனங்களை உற்பத்தி செய்ய டிவிஎஸ் நிறுவனம் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதை தொடர்ந்து, வருகின்ற 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதற்கட்டமாக அறிமுக காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.