20 ஹெச்பி பவருக்கு கூடுதலாக வழங்கும் வகையில் டியூனிங் செய்யபட்ட ரேஸ் வெர்ஷனாக டிவிஎஸ் என்டார்க் SXR மாடல் டிவிஎஸ் என்டார்க் 125 ஸ்கூட்டரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாசிக்கில் நடைபெற உள்ள இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2018 போட்டியில் பங்கேற் உள்ளது.
டிவிஎஸ் என்டார்க் SXR
மே 25 மற்றும் 26யில் நாசிக் நகரில் நடைபெற உள்ள நான்காவது சுற்று இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2018 போட்டியில் பங்கு பெற உள்ள இந்த ஸ்கூட்டரை மூன்று முறை தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற ஆசிஃப் அலி மற்றும் ஷமிம் கான் என இருவரும் பங்குபெற உள்ளனர்.
மிக நேர்த்தியாக டியூனிங் செய்யப்பட்ட 20 ஹெச்பி ஆற்றலுக்கு அதிகமாக வெளிப்படுத்தும் 4 ஸ்டோர்க்குகளை கொண்ட ஏர் கூல்டு எஞ்சினை பெற்று விளங்கும் டிவிஎஸ் என்டார்க் எஸ்எக்ஸ்ஆர் ஸ்கூட்டர் மாடல் தோற்ற அமைப்பில் பெரிதாக எவ்விதமான மாற்றங்களும் பெறாமல் ரேஸிங் பாடி ஸ்டிக்கரிங் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புதுப்பிக்கப்பட்ட இன்டேக் மற்றும் எக்ஸ்ஹாஸ்ட் அமைப்பு, ரேஸ் மாடலுக்கு ஏற்ற சஸ்பென்ஷனை பெற்றதாக வந்துள்ளது. அதிகபட்சமாக என்டார்க் SXR ஸ்கூட்டர் வேகம் மணிக்கு 120 கிமீ வரை எட்ட இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.