Categories: Bike News

RTX300 அறிமுகத்திற்கு தயாரான டிவிஎஸ் மோட்டார்.!

Tvs rtx 300 patent design

நெடுஞ்சாலை பயணத்திற்கு ஏற்ற வகையிலான அட்வென்ச்சர் டூரிங் மோட்டார்சைக்கிள் வடிவத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள டிவிஎஸ் RTX 300 பைக்கில் புதிதாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த RTX-D4 300cc எஞ்சின் பொருத்தப்பட உள்ளது.

முன்பாக ஆட்டோ எக்ஸ்போ 2025 அரங்கில் டிவிஎஸ் ஆர்டிஎக்ஸ் 300 பைக்கின் புகைப்படம் கசிந்த நிலையில், எப்பொழுது விற்பனைக்கு வரும் போன்ற முக்கிய தகவல்கள் தற்பொழுது வரை வெளியாகவில்லை என்றாலும் டிசைனுக்கு காப்புரிமை பெற்றுள்ளது.

ஆர்டிஎக்ஸ் 300 மாடலில்  299.1cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,000 rpmல் 35hp பவர் மற்றும் 7,000 rpmல் 28.5 Nm வெளிப்படுத்துகின்றது. இந்த எஞ்சினில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பெற்றதாக இருக்கும். இந்த மாடலில் கூடுதலாக ரைடு-பை-வயர் த்ரோட்டில் சிஸ்டம், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகியவற்றை பெற்றிருக்கும்.

இந்த மாடலில்  கோல்டன் நிறத்திலான அப்சைடு டவுன் ஃபோர்க்கு மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் அமைந்துள்ள RTX300 பைக்கில் முன்புறத்தில் 19 அங்குல வீல் மற்றும் 17 அங்குல வீல் பெற்றாலும் அலாய் வீல் பெற்றுள்ளது.

பைக்கின் அறிமுகம் குறித்து எந்த உறுதியான தகவலும் வெளியாகவில்லை என்றாலும், அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
Published by
MR.Durai
Tags: TVS RTX