வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய OBD-2B மாசு உமிழ்வுக்கு இணையான மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் 110 மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்றது. மேலும் இந்நிறுவனத்தின் மற்ற மாடல்கள் அனைத்தும் நடப்பு மார்ச் மாதத்தின் இறுதிக்குள் மேம்படுத்தப்பட உள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
புதிய ஜூபிடர் 110 சமீபத்தில் மேம்படுத்தப்பட்டதாக அறிமுகம் செய்யப்பட்டு 113.3சிசி எஞ்சின் 7.91bhp பவர் மற்றும் 9.8Nm @ 5000rpm (with Assist) 9.2Nm @ 5000rpm (without Assist) டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
OBD-2B இணக்கமான டிவிஎஸ் மோட்டார் வாகனங்கள் நவீன சென்சார் உடன் கூடிய தொழில்நுட்பம் மற்றும் ஆன்-போர்டு திறனில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தலுக்கு உட்பட்டுள்ளன.
OBD-2B, த்ரோட்டில் ரெஸ்பான்ஸ், காற்று-எரிபொருள் விகிதம், என்ஜின் வெப்பநிலை, எரிபொருள் அளவு மற்றும் என்ஜின் வேகம் ஆகியவற்றிற்கான தரவை சேகரிக்கும் சென்சார்களை பயன்படுத்துகிறது. ஆன்-போர்டு என்ஜின் கட்டுப்பாட்டு அலகு (ECU) நெருக்கமான கண்காணிப்புக்காக முன் திட்டமிடப்பட்ட அளவுருக்களில் அத்தகைய தரவை நேரடியாக பகுப்பாய்வு செய்கிறது. ஆன்-போர்டு நுண்ணறிவு, வாகனங்கள் அதன் வாழ்நாள் முழுவதும், மேம்பட்ட நீடித்துழைப்புடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் தொடர்ந்து எஞ்சின் இயங்க உதவுகிறது.
2025 டிவிஎஸ் மோட்டாரின் ஜூபிடர் 110 மாடலின் விலை ரூ.81,891 முதல் ரூ.94,196 வரை (எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)