டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை வரும் காலாண்டின் துவக்க வாரத்தில் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக டிவிஎஸ் சிஇஓ உறுதிப்படுத்தியுள்ளார்.
எலக்ட்ரிக் வாகன சந்தையில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக விளங்கும் டிவிஎஸ் கடந்த காலாண்டுக்கு முன்பாக 29,000 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த காலாண்டில் 48,000 யூனிட்கள் விற்பனையாகி உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
மின்சார இரு சக்கர வாகனம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த தலைமை செயல் அதிகாரி ராதாகிருஷ்ணன் விரிவான தகவல்களை வழங்குவதைத் தவிர்த்து, புதிய மின்சார வாகனம் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்படும் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
மற்றபடி, பிராண்ட் ரேஞ்ச், உள்ளிட்ட எந்த தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. விற்பனையில் கிடைக்கின்ற ஐக்யூப் ஸ்கூட்டரின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஐக்யூப் ST ஸ்கூட்டரை தொடர்ந்து தாமதப்படுத்தி வந்த டிவிஎஸ் தற்பொழுது இந்த மாடலை வெளியிட வாய்ப்புள்ளது.
டிவிஎஸ் ஐக்யூப் ST எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்புகள்
டிவிஎஸ் iQube ST வேரியண்டில் 4.56Kwh பேட்டரி வழங்கப்பட்டு ஈக்கோ மோடில் 145Km/Charge வழங்கும் என குறிப்பிட்டுள்ளது. டாப் ஸ்பீடு மணிக்கு 82Km/hr ஆகும். இந்த மாடலிலும் பொதுவாக பவர் 3KW மற்றும் டார்க் 33 Nm ஆகவே உள்ளது.
டாப் ஐக்யூபின் எஸ்டி வேரியண்டில் 950 வாட்ஸ் சார்ஜர் வழங்கப்பட்டு 0-80 % சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 06 நிமிடங்கள் ஆகும். கூடுதலாக 1.5Kw வேகமான சார்ஜர் வழங்கப்பட்டு 0-80 % சார்ஜ் செய்ய 2 மணி நேரம் 30 நிமிடங்கள் போதுமானதாகும்.
ஏற்கனவே சந்தையில் உள்ள ஐக்யூப் மாடல் 3.04Kwh பேட்டரியை பெற்று 90 கிமீ வரையிலான உண்மையான ரேஞ்ச் வழங்குகின்றது.