டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்பாச்சி RTX என்ற பெயருக்கான வர்த்தகரீதியான அனுமதியை பெற்றுள்ளது. RTR, RR மற்றும் RP என மூன்று பெயர்களை அப்பாச்சி சீரிஸில் பயன்படுத்தி வரும் நிலையில் கூடுதலாக ஆர்டிஎக்ஸ் என்ற பெயரை பதிவு செய்துள்ளது.
Apache RTX
அப்பாச்சி ஆர்டிஆர் வரிசை பைக்குகளில் 160சிசி, 180சிசி மற்றும் 200சிசி RTR ரேஞ்ச் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் உள்ளது. இதே பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் இந்த புதிய பைக்குகள் விற்பனைக்கு வரக்கூடும்.
ஆனால், புதிய மாடலுக்கான பெயர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, எந்தவொரு தகவலும் இல்லை.
பிஎம்டபிள்யூ-டிவிஎஸ் கூட்டணியில் முன்பே அப்பாச்சி RR 310 விற்பனையில் உள்ள நிலையில், பிஎம்டபிள்யூ வரிசையில் G 310 R நேக்டு ஸ்டைல், G 310 RR ஃபேரிங் ரக மாடல் மற்றும் G 310 GS அட்வெனச்சர் ஆகியவை விற்பனையில் உள்ளது. அனேகமாக இதன் அடிப்படையில் கூட முதல் அட்வென்ச்சர் பைக்கை டிவிஎஸ் மோட்டார் வெளியிடலாம்.
டிவிஎஸ் அப்பாச்சி RTX பைக் மாடல் பற்றி எந்தவொரு தகவலும் தற்பொழுது இல்லை.