இந்திய சந்தையில் கிடைக்கின்ற 300cc-400cc பிரிவில் உள்ள பிரீமியம் ஸ்போர்ட்டிவ் பைக் மாடல்களான டிவிஎஸ் அப்பாச்சி RTR 310, 2024 கேடிஎம் 390 டியூக், ட்ரையம்ப் ஸ்பீடு 400, மற்றும் பிஎம்டபிள்யூ G310 R ஆகிய மாடல்களின் நுட்பவிபரங்கள் ஒப்பீடு மற்றும் ஆன்-ரோடு விலை ஒப்பீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
TVS Apache RTR 310 vs 2024 KTM 390 Duke vs Triumph Speed 400 vs BMW G310 R : Engine
புதிதாக வந்துள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 310 மாடல் சக்தி வாய்ந்த 312சிசி என்ஜின் கொண்டு மிக நேர்த்தியான வடிவமைப்பினை கொண்டு அறிமுகம் செய்ய்ப்பட்டுள்ளது. இந்த பிரிவில் அதிக வரவேற்பினை பெற்ற கேடிஎம் 390 டியூக் மாடல் புதிய என்ஜின் மற்றும் புதிய டிசைனுடன் வந்துள்ளது.
ட்ரையம்ப் ஸ்பீடு 400 ரோட்ஸ்டெர் மாடலை பொறுத்தவரை, புதிய 390 டியூக் என்ஜினை போலவே அமைந்து சற்று குறைந்த பவரை வெளிப்படுத்துகின்றது. பிஎம்டபிள்யூ மற்றும் டிவிஎஸ் ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றன. பொதுவாக நான்கு மாடல்களும் லிக்யூடு கூல்டு என்ஜின் கொண்டு 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், DOHC பெற்று, சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் அம்சத்தை பெற்றுள்ளன.
TVS Apache RTR 310 | Triumph Speed 400 | 2024 KTM 390 Duke | BMW G 310 R | |
Engine | 312.12cc, single-cyl, liquid-cooled, DOHC | 398.15cc, single cyl, liquid-cooled DOHC | LC4c 398.7cc, single-cyl, liquid-cooled, DOHC | 313cc, single-cyl, liquid-cooled, DOHC |
Power | 35.6PS at 9,700rpm | 40PS at 8,000rpm | 44.86PS | 34PS at 9,250rpm |
Torque | 28.7Nm at 6,600rpm | 37.5Nm at 6,500rpm | 39Nm | 28Nm of torque at 7,500rpm |
Gearbox | 6-speed | 6-speed | 6-speed | 6-speed |
TVS Apache RTR 310 vs Triumph Speed 400 vs BMW G310 R vs 2024 KTM 390 Duke: Specs
நான்கு மாடல்களும் மிக சிறப்பான அட்ஜெஸ்டபிளிட்டி அம்சங்களை கொண்டு யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷனை கொண்டுள்ளன. பிரேக்கிங் அமைப்பில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்டுள்ளன. முழுமையான ஒப்பீடு அட்டவனை கீழே உள்ளது.
TVS Apache RTR 310 | Triumph Speed 400 | 2024 KTM 390 Duke | BMW G 310 R | |
Front suspension | Upside down forks | Big piston USD | WP Apex USD forks | Upside down forks |
Rear suspension | Monoshock with preload | Gas monoshock RSU preload | WP Apex monoshock preload | Monoshock with preload |
Suspension travel (F/R) | — | 140mm/130mm | 150mm/150mm | 140mm/131mm |
Brakes (F/R) | 300mm/240mm | 300mm/230mm | 320mm/240mm | 300mm/240mm |
Seat height | 800mm ± 10mm | 790mm | 820mm or 800mm | 785mm |
Weight | 169kg | 176kg | 176 Kg | 158.5kg |
Tyre – front | 110/70 R17 | 110/70 R17 | 110/70 ZR17 | 110/70 R17 |
Tyre – rear | 150/60 R17 | 150/60 R17 | 150/60 ZR17 | 150/60 R17 |
Fuel tank capacity | 11 litres | 13 litres | 13 litres | 11 litres |
TVS Apache RTR 310 vs 2024 KTM 390 Duke vs Triumph Speed 400 vs BMW G310 R : on-road price in Tamil Nadu
கொடுக்கப்பட்டுள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 310, கேடிஎம் 390 டியூக், ஸ்பீடு 400, ஜி310 ஆர் ஆகிய 4 பைக்குகளின் ஆன்-ரோடு விலை தோராயமானது, இதில் கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கும் பொழுது, டீலர்களை பொறுத்து விலை மாறுபடும்.
தயாரிப்பாளர் | விலை (எக்ஸ்-ஷோரூம்) | ஆன்-ரோடு விலை |
TVS Apache RTR 310 | ₹ 2,42,990 – ₹ 2,63,990 | ₹ 2,77,590 – ₹ 3,01,640 |
2024 KTM 390 Duke | ₹ 3,10,520 | ₹ 3,61,010 |
Triumph Speed 400 | ₹ 2,33,000 | ₹ 2,74,089 |
BMW G310 R | ₹ 2,85,000 | ₹ 3,24,561 |
ஒவ்வொரு மாடலும் தனக்கே உரித்தான பெர்ஃபாமென்ஸ் கொண்டிருப்பதனால், நம்முடைய பயண அனுபவத்திற்கு ஏற்ப சிறப்பான பைக்கினை தேர்வு செய்யலாம்.