ஃப்யூவல் இன்ஜெக்ஷன் அமைப்புடன் கூடிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V பைக் ரூ.1.07 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கார்புரேட்டர் மாடலை விட ரூ.8000 வரை விலை கூடுதலாக எஃப்ஐ மாடல் அமைந்துள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V FI
கடந்த 2016 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 200சிசி எஞ்சின் பெற்ற அப்பாச்சி RTR 200 4வி மாடலில் கார்புரேட்டர், எஃப்ஐ மற்றும் ஏபிஎஸ் ஆப்ஷனாலாக வழங்கப்படும் என அறிவிக்கபட்டிருந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஃப்யூவல் இன்ஜெக்ஷன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏபிஎஸ் பிரேக் பற்றி எந்த தகவலும் இல்லை.
அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.9 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும், அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.
RTR 200 Fi4V மாடல்களில் வெள்ளை மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டு நிறங்களில் மட்டும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V FI விலை ரூ. 1.07 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)