டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, புதிய வெள்ளை ரேஸ் எடிசன் மாடலை முந்தைய வருடத்தில் அறிமுகம் செய்ய மேட் ரெட் எடிசன் அடிப்படையில் எவ்வித மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் தோற்ற மாற்றங்களை பெற்றதாக டிவிஎஸ் அப்பாச்சி 160 வி2 பைக் ஆரத்ப விலை ரூ. 79,715 ஆகும்.
டிவிஎஸ் அப்பாச்சி 160 V2 ரேஸ் எடிசன்
முழுமையாக வெள்ளை நிறத்தை பெற்று விளங்கும் இந்த பைக்கில் பெட்ரோல் டேங்க் உட்பட முன்புற மக்கார்டு பின்புறத்தில் சில இடங்களில் சிவப்பு நிற பாடி ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு , டிவிஎஸ் நிறுவனத்தின் ஆர்ஆர்310 , புதிய அப்பாச்சி 160 4வி ஆகிய மாடல்களில் இடம்பெற்றுள்ளதை போன்ற டிவிஎஸ் மோட்டார் லோகோ பெட்ரோல் டேங்கில் இடம் பிடித்துள்ளது.
சமீபத்தில் டிவிஎஸ் மோட்டார் அறிமுகம் செய்திருந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலை அடிப்படையாக கொண்டு வி2 ரேஸ் எடிசன் வெளியிடப்படவில்லை, முந்தைய மாடலை அடிப்படையாக கொண்டே இந்த வேரியன்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் 15.1 ஹெச்பி குதிரை திறன் மற்றும் 13 என்எம் இழுவைத் திறன் வழங்க வல்ல 159.7சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு 5 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
வி2 ரேஸ் எடிசன் மாடலில் முன்புற டயரில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் வழங்கப்பட்ட வேரியன்ட் ரூ.79,715 மற்றும் இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக் பெற்ற மாடல் ரூ. 82,044 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும்.