டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற அப்பாச்சி ரக பைக் வரிசையில் இடம் பெற்று இருக்கின்ற 160 சிசி இன்ஜின் பெற்ற மாடலின் நான்கு வால்வு கொண்ட வேரியண்டில் தற்பொழுது கூடுதலாக அப்சைட் டவுன் ஃபோர்க்கானது கோல்ட் நிறத்தில் பெற்று மிகச் சிறப்பான கவர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான மூன்று நிறத்தைக் கொண்டிருக்கின்றது.
அப்பாச்சி 160 பைக்கின் தோற்ற அமைப்பிலும் மற்றபடி வசதிகளிலும் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை கூடுதலாக அப்சைட் டவுன் ஃபோர்க் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
TVS Apache RTR 160 4V gets USD Fork
ஏற்கனவே இந்த பைக்கில் 6 வேரியண்டுகள் உள்ள நிலையில் கூடுதலாக 7வது வேரியண்ட் சேர்க்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்ட மாடலை விட ரூ.520 மட்டுமே கூடுதலாக அமைந்துள்ளது. இந்த மாடல் சந்தையில் உள்ள பல்சர் என்160, பல்சர் என்எஸ்160, எக்ஸ்ட்ரீம் 160R 4V, மற்றும் SP160 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
159.7cc ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு என்ஜின் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் இடம்பெற்றுள்ளது. Sport மோட் 17.55hp பவரை 9250 rpm-லும், டார்க் 14.73 Nm ஆனது 7250 rpm அடுத்து, Urban/ Rain மோட் 15.64 hp பவரை 8600 rpm-ல், டார்க் 14.14 Nm ஆனது 7250 rpm-ல் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
புதிதாக மைட் பிளாக், கிரானைட் கிரே மற்றும் பேரல் வெள்ளை என மூன்று நிறங்களில் இந்த புதிய கோல்டு நிறத்தை பெற்ற அப்சைடு ஃபோர்க் உள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V பைக்கின் தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1.38 லட்சம் வரை கிடைக்கின்றது.