தரத்தின் அடையாளமாக விளங்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய அசரடிக்கும் திறன் வாய்ந்த டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக் பற்றி முக்கிய விபரங்களை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.
டிவிஎஸ் அப்பாச்சி RR 310
தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் கம்பெனி ஜெர்மனி நாட்டின் பிஎம்டபிள்யூ மோட்டார்டு இணைந்து உருவாக்கிய பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கினை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள சுறா மீன் வடிவ உந்துலை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள அப்பாச்சி ஆர்ஆர் 300 பைக் பற்றி தொடர்ந்து அறிவோம்.
பிஎம்டபிள்யூ நிறுவனம் ஜி 310 ஆர் பைக் மாடலுக்கு பயன்படுத்தி பாகங்களை பகிர்ந்து கொண்டுள்ள அப்பாச்சி 310 மாடல் சில குறிப்படதக்க மாறுதல்ளை ஸ்போர்ட்டிவ் தன்மைக்கு ஏற்ப பெற்றுள்ளது. குறிப்பாக Trellis அடிச்சட்டம் பின்புறத்தில் நீட்டிக்கப்பட்டிருப்பதுடன், செயின் ஸ்ப்ராகெட் 41 பற்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 . கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தபட்ட டிவிஎஸ் அகுலா 310 மாடலின் தோற்றத்தை பின்பற்றி டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. ஏரோடைனமிக் டிசைன் தாத்பரியங்களை கொண்டு வடிவமைக்கபட்டுள்ள அப்பாச்சி 310 நவீன தலைமுறையினருக்கு ஏற்ற அம்சங்களை பெற்று உயர் வேகத்திங் பயணிக்கும் திறன் கொண்டதாக விளங்குகின்றது.
3. உயர் தர சிசி கொண்ட ஸ்போர்ட்டிவ் பைக்குகளை போன்ற ரைடிங் பெசிஷனை பெற்றுள்ள அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடல் கேடிஎம் ஆர்சி390, நின்ஜா 300 ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
4. பிஎம்டபிள்யூ மாடலில் இடம்பெற்றுள்ள அதே 312 cc எஞ்சின் பொருத்தப்பட்டு 9700 ஆர்பிஎம் சுழற்சியில் 33.5 bhp ஆற்றல் மற்றும் 7700 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகபட்சமாக 27.3 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் வாயிலாக ஆற்றலை எடுத்துச் செல்கின்றது.
5. மணிக்கு அதிகபட்சமாக 165 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் பெற்றுள்ள டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக் 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 3.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும். 0-100 கிமீ வேகத்தை எட்ட 7.17 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். பிஎம்டபிள்யூ G 310 R பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 145 கிமீ ஆகும்.
6. மிக நேர்த்தியான முகப்பை பெற்றுள்ள அப்பாச்சி 310 மாடலில் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் வந்துள்ளது.இரட்டை பிரிவு கொண்ட பை எல்இடி புராஜெக்டர் முகப்பு விளக்குகளுடன், எல்இடி டெயில் விளக்குகளை கொண்டிருப்பதுடன் மிக நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.
7. முன்புறத்தில் தங்க நிறத்திலான Kayaba 41 mm யூஎஸ்டி ஃபோர்க்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் பொருத்தபட்டுள்ளது. முன்புற சக்கரங்களில் மிச்செலின் பைலட் ஸ்டீரிட் டயர் 110/70 பெற்று 300 மிமீ டிஸ்க் பிரேக் பெற்றிருப்பதுடன், பின்புறத்தில் 150/60 பெற்று 240 மிமீ டிஸ்க் பிரேக் உடன் வந்துள்ளது.
8. டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனை நிரந்தரமாக பெற்றுள்ள அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடல் மிக சிறப்பான பிரேக்கிங் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும்.
9. டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக் மாடலுக்கு எதிராக சந்தையில் கேடிஎம் ஆர்சி 390, கவாஸாகி நின்ஜா 300, மற்றும் பெனெல்லி 302R ஆகிய மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றது.
10. டிவிஎஸ் மோட்டார்ஸ் போட்டியாளர்களை விட மிகவும் சவாலான வசதிகளுடன் நவீன ரேசிங் மெஷினை வெளியிட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி RR 310 ரூ.2.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஆகும்.