ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 X என இரு மாடல்களுக்கான முன்பதிவை துவங்கியுள்ளது. ப்ரீ புக்கிங் கட்டணமாக ரூ.2,000 வசூலிக்கப்படுகின்றது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ள இரு பைக் மாடல்களும் ரூ.3.00 லட்சம் ஆரம்ப விலையில் வெளியாகலாம்.
Triumph Speed 400 & Scrambler 400X
இரண்டு மாடல்களுமே ஒரே என்ஜினை பகிர்ந்து கொள்ளகின்றது. ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400x பைக்கில் புதிய TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
ஆஃப் ரோடு மற்றும் ஆன்-ரோடு பயன்பாடுகளுக்கு ஏற்ற டயர் வழங்கப்பட்டுள்ள ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பு, பிரேக்கிங் இரு மாடல்களுக்கும் வித்தியாசப்படுகின்றது.
மேலும் படிங்க – ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் வித்தியாசங்கள்
இரண்டு தயாரிப்புகளும் ட்ரையம்ப் நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. வாங்க விருப்பம் உள்ளோர் இந்த மோட்டார்சைக்கிள்களை ரூ. 2,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம். (முழுமையாகத் திரும்பப் பெறப்படும்).
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியாவின் இணையதளத்தில் ஸ்டைலிங், அம்சம் மற்றும் விவரக்குறிப்புகள் தொடர்பான அனைத்து விவரங்களும் கிடைக்கின்றன. ஜூலை 5, 2023 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகே விலை அறிவிக்கப்படும்.