கடந்த மே 2023 மாதாந்திர முடிவில் விற்பனையில் முதல் 10 இடங்களை கைப்பற்றிய ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை நிலவரத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
முதலிடத்தில் தொடர்ந்து ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை 2,03,365 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இரண்டாமிடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 57,698 எண்ணிக்கையில் உள்ளது. மூன்றாவது இடத்தில் சுசூகி ஆக்செஸ் 45,945 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.
டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2023
டாப் 10 | மே 2023 | மே 2022 |
1. ஹோண்டா ஆக்டிவா | 2,46,016 | 1,49,407 |
2. டிவிஎஸ் ஜூபிடர் | 57,698 | 59,613 |
3. சுசூகி ஆக்செஸ் | 45,945 | 35,709 |
4. ஒலா | 28,469 | 9,269 |
5. டிவிஎஸ் என்டார்க் | 27,586 | 26,005 |
6. டிவிஎஸ் ஐக்யூப் | 17,937 | 2,637 |
7. ஹீரோ ஜூம் | 13,377 | – |
8. சுசூகி பர்க்மேன் | 10,234 | 12,990 |
9. ஏதெர் 450X | 9,670 | 3,664 |
10. பஜாஜ் சேட்டக் | 9,208 | 2,544 |
கடந்த மாதம் ஃபேம் 2 மானியம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டரிகளின் விற்பனை எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது. ஆனால் ஜூன் மாத விற்பனையில் பெரும் வீழ்ச்சியை எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்திக்க உள்ளது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களான ஓலா, ஏதெர் 450X, ஐக்யூப், பஜாஜ் சேட்டக் ஆகியவை இடம்பெற்றுள்ளது.