இத்தாலியின் மிலன் நகரில் நடந்த EICMA-வில் யமஹா நிறுவனம் தனது மூன்று வீல் கொண்ட யமஹா நிகேன் ஜிடி 2019 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்தது. யமஹா நிறுவன இன்ஜினியர்கள் மூலம் புதிய வெர்சனாக, ஸ்போர்ட்ஸ் டூரர் டிசைனில், நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் யமஹா நிகேன் ஜிடி 2019 மோட்டார் சைக்கிள்களை உருவாக்கியுள்ளனர். யமஹா நிகேன் ஜிடி 2019 மோட்டார் சைக்கிள் மூன்று வீல் கொண்டதாக உருவாக்கியுள்ளனர்.
யமஹா எம்டி-09 மோட்டார் சைக்கிள்கள் 847cc, மூன்று சிலிண்டர் இன்ஜின்களுடன் 114bhp ஆற்றலில் 10,000rpm மற்றும் 87.5 Nm டார்க்யூவில் 8500 rpm கொண்டதாக இருக்கும். மேலும் இதில் குயி-க்ஷிப்னர், மூன்று மோடுகளுடன் கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஸ்டாண்டர்ட் சிலிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் கொண்டதாக இருக்கும்.
இந்த மோட்டார் சைக்கிளில் ஷார்ப் வளைவுகளை கொண்ட கார்னர்களுடன், இரண்டு பக்கமும் அப்கிரேடட் வீல்களை கொண்டிருக்கும். இதில் முன்புற வீல்கள் இரண்டும் 15 இன்ச் கொண்டதாகவும் இரண்டு தனிப்பட்ட இன்வேர்ட்டட் போர்க் பொருத்தப்பட்டிருக்கும்.
வழக்கமான நிக்கான், போன்று இல்லாமால் புதிய யமஹா நிகேன் ஜிடி வசதிகள் கொண்டிருக்கும். இது மட்டுமின்றி 12 வோல்ட் சார்ஜிங் அவுட்லெட், அகலமான சீட்கள், உயரமான விண்ட் ஸ்கிரீன், அழகிய கிரிப்களுடன் கூடிய ஹேண்டில் பார் மற்றும் 25 லிட்டர் பென்னியர் மற்றும் ரியர் கிரிப் பார்களும் உள்ளன.
யமஹா நிகேன் ஜிடி 2019 எப்போது விற்பனைக்கு வரும் மற்றும் இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை போன்றவை குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.