சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் புதிய சுசூகி இன்ட்ரூடர் பைக் அடுத்த சில மணி நேரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. சுஸூகி இன்ட்ரூடர் பைக்கில் உள்ள முக்கிய சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.
சுசூகி இன்ட்ரூடர் பைக்
மிகவும் சவாலான விலையில் உயர்ரக பவர் க்ரூஸர் மாடல்களின் தோற்ற உந்துதலை பின்னணியாக கொண்டு இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இன்ட்ரூடர் க்ரூஸர் பைக்கில் ஜிக்ஸெர் மாடலில் உள்ள 154சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது.
டிசைன்
இந்திய சந்தையில் கிடைக்கின்ற பஜாஜ் அவென்ஜர் மாடலுக்கு எதிராக மிகுந்த சவாலை ஏற்படுத்தும் வகையில் 150சிசி பிரிவில் மிகவும் நேர்த்தியான வடிவ அம்சத்தை பெற்றதாகவும் விளங்கும் வகையிலான இன்ட்ரூடர் க்ரூஸர் மாடலில் இரட்டை பிரிவு கொண்ட இருக்கை வழங்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் புராஜெக்டர் எல்இடி ஹெட்லைட் இடம்பெற்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் பெற்றதாக நீண்ட தொலைவு பயணிக்கும் வகையிலான இருக்கை அமைப்பை பெற்றதாக விளங்கும் வகையில் இந்த பேக் மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஞ்சின்
ஜிக்ஸெர் மற்றும் ஜிக்ஸெர் SF பைக்குகளில் இடம்பெற்றுள்ள இதே எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 8000 ஆர்பிஎம் சுழற்சியில் 14.8 ஹெச்பி குதிரை திறன் மற்றும் 6000 rpm சுழற்சியில் அதிகபட்சமாக 14 என்எம் டார்க்கினை வழங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும்.
இந்த பைக்கில் முன்புற சக்கரங்களில் டிஸ்க் பிரேக் அம்சத்துடன் கூடிய சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இடம் பெற்றிருக்கும்.
சிறப்பம்சங்கள்
எல்இடி ஹெட்லைட், ஏபிஎஸ்,ஸ்டைலிஷனான தோற்ற அமைப்பு, டிஸ்க் பிரேக் அமைப்பு உட்பட பல்வேறு வசதிகளை கொண்ட டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை பெற்றிருக்கும்.
விலை
ரூ.95,000 ஆரம்ப விலையில் சுசூகி இன்ட்ரூடர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.