இந்திய மோட்டார் வாகன சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய க்ரூஸர் பைக் மாடல் ஒன்றை நவம்பர் 7, 2017 அன்று விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.
சுசூகி க்ரூஸர் பைக்
இந்திய இருசக்கர வாகன சந்தையில் சுசூகி நிறுவனம் ஆக்செஸ் ஸ்கூட்டர் மற்றும் ஜிக்ஸெர் வரிசை பைக்குகள் வாயிலாக மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், இந்நிறுவனம் 150சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவுகளில் தனது மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அந்த வரிசையில் ஆசியா நாடுகள் உட்பட பல்வேறு சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்ற சுசூகி GZ150 க்ரூஸர் ரக பைக் மாடலை இந்தியாவில் உள்ள பஜாஜ் அவென்ஜர் மாடலுக்கு எதிராக நிலைநிறுத்த வாய்ப்புள்ளது.
சுசூகி GZ150 பைக் விபரம்
வட்ட வடிவ முகப்பு விளக்கு , கிளாசிக் டிசைன் என க்ரூஸருக்கு உரித்தான அம்சங்களுடன் ஸ்பிளிட் செய்யப்பட்ட இரு இருக்கைகள் என ஜிஇசட்150 சோப்பர் மாடலாக விளங்குகின்றது.
சுஸூகி GZ150 பைக்கில் 15.42 hp பவரை வெளிப்படுத்தும் ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு SOHC 150சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 11.20 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 5 வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
ஜிஇசட் 150 பைக்கின் நீளம் 2,250மிமீ, அகலம் 900மிமீ மற்றும் உயரம் 1,160மிமீ பெற்று இருக்கையின் உயரம் 710 மிமீ கொண்டதாக உள்ளது. இந்த பைக்கின் எடை 137 கிலோ கிராம் ஆகும். முன்புறத்தில் 18 அங்குல அலாய் சக்கரம் மற்றும் பின்புறத்தில் 16 அங்குல அலாய் சக்கரம் பெற்று முன்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் ஆப்ஷனுடன் விளங்குகின்றது. மேலும் பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பில் டெலிஸ்கோபிக் முன்புறத்திற்கு வழங்கப்பட்டு சாக் அப்சார்கள் பின்புறத்தில் இடம்பெற்றுள்ளது.
விலை விபரம்
வருகின்ற நவம்பர் 7ந் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள சுசூகி ஜிஇசட் 150 க்ரூஸர் பைக் ரூ.90,000 விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.