இத்தாலி மிலன் நகரில் நடைபெறுகின்ற EICMA 2023 மோட்டார் கண்காட்சியில் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், GSX-8R மற்றும் GSX-S1000GX என இரண்டு புதிய பைக்குகளை காட்சிப்படுத்தியுள்ளது.
ஸ்போர்ட்டிவ் பைக் பிரிவில் ஃபேரிங் செய்யப்பட்ட மாடலாக வந்துள்ள GSX-8R பைக்கில் 776 சிசி இன்லைனன் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினின் நுட்பவிபரங்கள் அறிவிக்கப்படவில்லை.
Suzuki GSX-8R
ஏற்கனவே விற்பனையில் உள்ள அட்வென்ச்சர் ரக V-Strom 800 மற்றும் நேக்டூ ஸ்டைல் GSX-8S பைக்குகளில் உள்ள 776cc இன்லைனன் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருப்பதனால், அனேகமாக இந்த மாடலும் 82hp பவர் மற்றும் 78Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
GSX-8R பைக்கில் ரைடு-பை-வயர், குறைந்த ஆர்பிஎம் அசிஸ்ட், டிராக்ஷன் கட்டுப்பாடு, பை டைரக்சனல் க்விக் ஷிஃப்டர், ஏபிஎஸ் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்த பைக் மாடலில் ஷோவா SFF-BP ஃபோர்க்கு மற்றும் பின்புறத்தில் லிக்டூ ஷாக் அப்சார்பர் உள்ளது. முன்புற பிரேக்குகள் இரட்டை 310 மிமீ டிஸ்க் மற்றும் ஒற்றை 240 மிமீ பின்புற டிஸ்க் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டன்லப் ரோட்ஸ்போர்ட் 2 டயர்களுடன் 17 இன்ச் காஸ்ட் அலுமினிய வீல் இணைக்கப்பட்டுள்ளன.
Suzuki GSX-1000GX
அடுத்து, இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள GSX-S1000GX ஸ்போர்ட்டிவ் கிராஸ்ஓவர் பைக்கில் 999cc இன்லைன் நான்கு சிலிண்டர் லிக்விட்-கூல்டு இன்ஜின் பவர் மற்றும் டார்க் புள்ளிவிவரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை.
GSX-S1000GX பைக்கின் முன்புறத்தில் USD முன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் பெற்று இவை இரண்டும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவை ஆகும். இரட்டை 310 மிமீ முன் டிஸ்க் மற்றும் ஏபிஎஸ் உடன் ஒற்றை பின்புற டிஸ்க் கொண்டுள்ளது. 120/70 முன்புற டயர் மற்றும் 190/50 பின்புற டயர்களில் மூடப்பட்ட 17 அங்குல சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ளன.