சமீபத்தில் வெளியான சுஸுகி மோட்டார்சைக்கிளின், ஜிக்ஸர் SF 250 மாடலுக்கு 6 விதமான ஆக்செரீஸ்களை இந்நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. குறிப்பாக இருக்கை கவர், பெட்ரோல் டேங்க் பாதுகாப்பு கவர் போன்றவையும் உள்ளது.
ரூ.1.70 லட்சத்தில் மிகவும் ஸ்டைலிஷாக விற்பனைக்கு வெளியிடப்பட்டிருக்கின்ற ஜிக்ஸர் எஸ்எஃப் 250 மாடலின் அடிப்படையிலான நேக்டு வெர்ஷன் அடுத்த சில மாதங்களில் ஜிக்ஸர் 250 என வரவுள்ளது.
சுஸுகி ஜிக்ஸர் SF 250
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 6 ஆக்செரீஸ்கள் சுஸுகி ஜிக்ஸர் SF வரிசைக்கு முழுமையாக பொருந்தும், அதாவது 250சிசி மற்றும் 155சிசி என இரு ஃபேரிங் மாடலுக்கும் ஏற்றதாகவே விளங்கும்.
- டேங்க் புராடெக்டர் – ஸ்கிராட்ச்களில் இருந்து பாதுகாக்க உதவும்
- டேங்க் கிராபிக் – பெட்ரோல் டேங்கின் மேற்பகுதியில் வைக்கும் பொருட்களால் ஏற்படும் ஸ்கிராட்சினை தடுக்கும்.
- ரிம் ஸ்டிக்கர் – ரிம்யில் வழங்கப்பட்டுள்ள ஸ்டிக்கர் வாயிலாக ஸ்டைலிசான் தோற்றத்தை அதிகரிக்கின்றது.
- DC சாக்கெட் – நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வமான மொபைல் சார்ஜிங் வசதிக்கு டிசி சாக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
- இருக்கை கவர்
- ஸ்மோக்டு வைஷர்
சுஸுகி ஆயில் கூலிங் சிஸ்டம் (SOCS – Suzuki Oil Cooling System) நுட்பம் பெற்றதாக 249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஃப்யூவல் இன்ஜெக்ஷன் ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.
14.1 hp பவரை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் எஸ்எஃப் வரிசை பைக் என்ஜினில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் பெற்று சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
சுஸுகி ஜிக்ஸர் SF – ரூ.1.10 லட்சம்
சுஸுகி ஜிக்ஸர் SF 250 – ரூ.1.70 லட்சம்