250சிசி சுசுகி ஜிக்ஸர் SF 250 வரும் மே 20 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள நிலையில் ரூ. 1.80 லட்சத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்பாக ஜிக்ஸர் எஸ்எஃப் 250 பைக்கின் பவர் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகிருந்தது.
சர்வதேச அளவில் சுசுகி GSX 250R என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலின் அடிப்படையில் புதிய 250 சிசி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்பாக இந்திய சந்தையில் மிக பிரபலமான மாடலாக 150சிசி கொண்ட ஜிக்ஸர் பைக் விளங்குகின்றது.
சுசுகி ஜிக்ஸர் SF 250 சிறப்புகள்
250சிசி சந்தையில் சிறப்பான பவரை வெளிப்படுத்துகின்ற மாடலாக விற்பனைக்கு வரவுள்ள இந்த பைக்கில் ஆயில் கூல்டு 249சிசி SOHC , 4 வால்வுகளை பெற்ற ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 26.5 ஹெச்பி பவரும் மற்றும் 22.6Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றிருக்கின்றது.
சுசுகி GSX-R1000 மோட்டார்சைக்கிள் அடிப்படையிலான ஹெட்லைட் யூனிட், ஸ்டைல் அம்சங்கள் உட்பட எல்இடி டெயில்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் பல்வேறு நவீன வசதிகள் மற்றும் ஸ்மார்ட்போனை இணைக்கும் அம்சத்துடன் டைமன்ட் கட் ஃபினிஷ் பெற்ற மல்டி ஸ்போக் அலாய் வீல் பெற்றுள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற யமஹா ஃபேஸர் 25, ஹோண்டா சிபிஆர்250ஆர், நேரடியாக எதிர்கொள்ளும். இதுதவிர ஃபேரிங் அல்லாத நேக்டு மாடலையும் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.
இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள சுசுகி ஜிக்ஸர் SF 250 பைக்கின் விலை ரூ.1.80 லட்சத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.