இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் கூடுதலாக டிரம் பிரேக் உடன் கூடிய அலாய் வீல் பெற்ற வேரியண்டை ரூ.59,891 விலையில் சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்திய ஆட்டோமொபைல் சந்தை மிகப்பெரிய அளவில் சரிவினை கண்டு வரும் நிலையில் வளர்ச்சியை பதிவு செய்து வரும் ஒரே நிறுவனமாக சுஸூகி மோட்டார்சைக்கிள் விளங்கி வருகின்றது. இந்நிறுவனம், ஜிக்ஸர் SF 250, ஜிக்ஸர் 250, 2019 ஜிக்ஸர் SF மற்றும் 2019 ஜிக்ஸர் உட்பட மோட்டோ ஜிபி பதிப்புகளை வெளியிட்டிருந்த நிலையில், புதிதாக ஸ்பெஷல் வேரியண்ட் உட்பட புதிய வேரியன்டை ஆக்செஸ் மாடலில் வெளியிட்டுள்ளது.
ஆக்செஸ் 125 மாடலில் 124 சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்ட் என்ஜின் பொருத்தப்பட்டு 8.4 பிஹெச்பி பவரும் மற்றும் 10.2 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் வழங்கப்பட்டிருக்கின்றது. பிரேக்கிங் முறையில் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக்குடன் சிபிஎஸ் அம்சத்துடன் பொருத்தப்பட்டுள்ளது
சுஸூகி ஆக்செஸ் டிரம் பிரேக் ஆலாய் வீல் – ரூ.59,891
சுஸூகி ஆக்செஸ் SE – ரூ. 61,590
(எக்ஸ்ஷோரூம் டெல்லி)