இந்தியாவில் விற்பனையாகின்ற நம்பகமான ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின், சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் CBS `எனப்படுகின்ற காம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடியதாக விற்பனைக்கு ரூ. 58,980 விலையில் வெளியாகியுள்ளது.
சுசூகி ஆக்செஸ் 125 CBS
சிபிஎஸ் எனப்படுகின்ற (CBS – Combined Brake System) வாயிலாக இருசக்கர வாகனத்தின் பிரேக்கிங் திறன் செயல்பாடு சிறப்பாக அமைந்திருக்கும். அதாவது பின்புற பிரேக் லிவர் பயன்படுத்துப்படும் போது முன் மற்றும் பின் என இரு பிரேக்குகளை ஒரே சமயத்தில் செயற்பட்டு குறைந்த தூரத்தில் இருசக்கர வாகனம் நிற்க உதவுகின்றது. சிபிஎஸ் நுட்பம் 125சிசி க்கு குறைந்த மோட்டார்சைக்கிளில் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல், பாதுகாப்பு .சார்ந்த சிபிஎஸ் முறையை பெற்றிருப்பதுடன் கூடுதல் சிறப்பு எடிஷன் மாடலாக மெட்டாலிக் சோனிக் சில்வர் நிறத்தை பெற்று பீஜ் நிறத்திலான லெதர் இருக்கை, வட்ட வடிவ க்ரோம் மிரர், கருப்பு நிற கிராப் ரெயில் ஆகியவற்றை கொண்டுள்ளது.
ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் 8.7 பிஎஸ் ஆற்றல் மற்றும் 10.1 என்எம் டார்கினை வெளிப்படுத்தும் காற்றினால் குளிர்விக்கும் வகையிலான எஞ்சினை பெற்று சிவிடி கியர்பாக்ஸ் பெற்றதாக வந்துள்ளது.
டிஸ்க் பிரேக் வேரியன்டில் மட்டும் சிபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் டிரம் பிரேக் வேரியன்டில் இடம்பெறவில்லை. தற்போது ஆக்செஸ் 125 சிபிஎஸ் ஸ்கூட்டர் நீலம், சிவப்பு, கருப்பு, மெட்டாலிக் கிரே, மெட்டாலிக் சில்வர் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.
சுசூகி ஆக்செஸ் 125
சுசூகி ஆக்செஸ் 125 CBS விலை ரூ. 58,980
சுசூகி ஆக்செஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 60,580
(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)