வரும் ஜனவரி மாதம் விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஆக்செஸ் 125 புதிய வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட் பெற்றதாக விளங்குகின்றது.
Fi என்ஜின் பெற்றதாக வந்துள்ள ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் 124 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 6750 ஆர்.பி.எம்-ல் 8.7 பிஎஸ் பவர் மற்றும் அதே நேரத்தில் 5500 ஆர்.பி.எம்-மில் 10 என்எம் டார்க் வழங்கும். இந்த ஸ்கூட்டரின் சி.வி.டி டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. விற்பனையில் கிடைக்கின்ற பிஎஸ்4 மாடலில் இதே பவர் மற்றும் டார்க் வழங்கியது குறிப்பிடதக்கதாகும்.
தோற்ற அமைப்பில் மாறுதல் இல்லையென்றாலும் கூடுதலாக ஈகோ அசிஸ்ட் இலுமினிஷேன், வெளிப்புறத்தில் எரிபொருள் நிரப்புதலுக்கான மூடி மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் கூடுதலாக வரவுள்ள சிறப்பு பதிப்பு மாடலில் யூஎஸ்பி டி.சி சாக்கெட்டை சுசுகி வழங்குகின்றது.
இந்நிறுவனத்தின் முதல் பிஎஸ் 6 எஞ்சினுடன் புதுப்பிக்கப்பட்ட முதல் சுசுகி தயாரிப்பு சுசுகி ஆக்செஸ் 125 ஆகும். இந்த மாடல் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்படும் போது விலை விவரங்களை சுசுகி வெளிப்படுத்தும். இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்திருக்கும் நிலையிலும் சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தொடர்ந்து சீரான வளர்ச்சி அடைந்து வருகின்றது.