125சிசி சந்தையில் பிரசத்தி பெற்ற மாடலாக விளங்குகின்ற சுசுகி மோட்டார் சைக்கிளின் அக்செஸ் 125 ஸ்கூட்டரில் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜின் பெற்று 68 ஆயிரத்து 285 ரூபாய் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
டிசைன் & ஸ்டைலிங் அம்சம்
ஸ்பெஷல் எடிசன் உட்பட மொத்தமாக 8 விதமான நிறங்களில் கிடைக்கின்ற இந்த ஸ்கூட்டரில் தோற்ற வடிவமைப்பில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. வழக்கமான ஸ்டைலில் அமைந்துள்ள இந்த மாடலில் நேர்த்தியான இருக்கை அமைப்பு, எல்இடி ஹெட்லைட் இணைக்கப்பட்டு, வெளிப்புறத்தில் எரிபொருள் நிரப்பும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
என்ஜின்
எஃப்ஐ முறையை பெற்ற என்ஜினை கொண்டு விற்பனைக்கு வந்துள்ளது. Fi வசதி என்ஜின் பெற்றதாக வந்துள்ள ஆக்செஸ் 125 ஸ்கூட்டரில் 124 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 6750 ஆர்.பி.எம்-ல் 8.7 பிஎஸ் பவர் மற்றும் அதே நேரத்தில் 5500 ஆர்.பி.எம்-மில் 10 என்எம் டார்க் வழங்கும். இந்த ஸ்கூட்டரின் சி.வி.டி டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. முந்தைய பிஎஸ் 4 மாடலை விட டார்க் குறைக்கப்பட்டுள்ளது.
வசதிகள்
அக்செஸில் இலகுவாக ஸ்டார்ட் செய்ய ஈசி ஸ்டார்ட் சிஸ்டம், ஈகோ அசிஸ்ட் இலுமினிஷேன் (பேஸ் வேரியண்டில் இல்லை), டிஜிட்டல் முறையில் பேட்டரி நிலவரம் அறிகின்ற வசதி, வெளிப்புறத்தில் எரிபொருள் நிரப்புதலுக்கான மூடி மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் கூடுதலாக கிடைக்கின்ற சிறப்பு பதிப்பு மாடலில் யூஎஸ்பி டி.சி சாக்கெட்டை சுசுகி வழங்கியுள்ளது.
முன்புறத்தில் டிரம் அல்லது டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு பின்புறத்தில் டிரம் பிரேக்குடன், சிறப்பான பிரேக்கிங் திறனை வழங்க கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. அலாய் மற்றும் ஸ்டீல் வீல் என இருவிதமான ஆப்ஷனையும் கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்
இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற மேஸ்ட்ரோ எட்ஜ் 125, புதிய ஹோண்டா ஆக்டிவா 125 மற்றும் யமஹாவின் ஃபேசினோ 125 போன்ற மாடல்களை நேரடியாக எதிர்கொள்ள உள்ளது. மேலும், போட்டியாளர்களை விட குறைந்த விலையில் அக்செஸ் 125-யின் விலை அமைந்துள்ளது.
அக்செஸ் 125 விலை
Drum Brake Variant with CBS – ₹ 68,285/-
Drum Brake Variant (Alloy Wheel) with CBS – ₹ 70,286/-
Disc Brake Variant with CBS – ₹ 71,285/-
Special Edition Drum Brake Variant (Alloy Wheel) with CBS – ₹ 71,985/-
Special Edition Disc Brake Variant with CBS ₹ 72,985/-
(எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)